22 முறை ரஜினியுடன் இணைந்து நடித்திருந்தாலும் ரசிகர்களை மகிழ்வித்தது எனவோ இந்த 4 திரைப்படத்தில் தான்..!

sri devi-1

சினிமாவில் தன்னுடைய ஆறு வயதில் இருந்து திரையில் பயணித்து வருபவர்தான் நடிகை ஸ்ரீதேவி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து இதுவரை 22 திரைப்படங்களில் நடித்துள்ளார். அந்த வகையில் நடிகை ஸ்ரீதேவி தமிழ் மொழி மட்டுமின்றி பல்வேறு மொழிகளிலும் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

ஸ்ரீ தேவி மறைந்தாலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது 71 வயதிலும் ரசிகர்களை தனது நடிப்பின் மூலம் சந்தோஷப்படுத்தி வருகிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது அண்ணாத்த என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார் இத்திரைப்படம் விமர்சன ரீதியாக தோல்வியடைந்தாலும்  வசூலில் வெளுத்து வாங்கியது.

sri devi-1
sri devi-1

இது ஒரு பக்கம் இருக்க ஸ்ரீதேவியுடன் இணைந்து நடித்த நமது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் திரைப்படம் பற்றி பார்க்கலாம்.  மூன்று முடிச்சு இத் திரைப்படமானது கே பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான திரைப்படமாகும். இவ்வாறு உருவான இத்திரைப்படம் தெலுங்கு படத்தின் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரியா இத்திரைப்படத்தை பிரபல இயக்குனர் முத்துராமன்  இயக்கத்தில் வெளிவந்த திரைப்படமாகும் சுஜாதாவின் வாழ்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம் ஆகும் இத்திரைபடத்தில் இடம்பெற்ற கணேஷ் மற்றும் பிரியா கதாபாத்திரம் நல்ல வரவேற்பை பெற்றுக் கொடுத்தது.

ஜானி திரைப்படம் ஆனது மகேந்திரன் இயக்கத்தில் வெளியான திரைப்படமாகும் இவ்வாறு உருவான இத்திரைபடமானது ரஜினியின் வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக அமைந்த திரைபடம் என்றும் கூட சொல்லலாம் இத்திரைபடத்தில் ஸ்ரீதேவியுடன் ரஜினி இரண்டு வேடங்களில் நடித்திருப்பார்.

போக்கிரி ராஜா திரைப்படம் ஆனது முத்துராமன் இயக்கத்தில் வெளியான திரைப்படமாகும் இந்த திரைப்படத்தில் ரஜினி ஸ்ரீதேவி ராதிகா என பல்வேறு பிரபலங்கள் நடித்த இந்த படத்திலும் ரஜினி இரட்டை வேடத்தில் நடித்து அசத்தியிருப்பார்.