சினிமா உலகில் இருக்கும் ஒவ்வொருவருக்கும் ஒரு ஆசை அந்த வகையில் நடிகர் அல்லு அர்ஜுன் எத்தனையோ திரைப்படங்களில் நடித்திருந்தாலும் கிராமத்து கதை மற்றும் வித்தியாசமான கதைகளில் நடிக்க வேண்டும் என்பதுதான் ஆசை.. இதனால் தன்னை நம்பி வரும் இயக்குனர்களிடம்..
இது போன்ற வித்தியாசமான கதைகள் இருந்தால் சொல்லுங்கள் நடிக்கிறேன் என கூறி உள்ளார். ஒரு கட்டத்தில் இயக்குனர் சுகுமார் புஷ்பா படத்தின் கதையை சொல்ல அல்லு அர்ஜுனுக்கு ரொம்ப பிடித்து போகிறது உடனே படமாக உருவாகியது இந்த படத்தில் அல்லு அர்ஜுனுடன் கைகோர்த்து ராஷ்மிகா மந்தனா மற்றும் பல முன்னணி நட்சத்திர நடிகர், நடிகைகள் நடித்தனர்.
படம் வெளிவந்து பட்டையை கிளப்பியது குறிப்பாக பிற மொழிகளில் புஷ்பா வேற லெவலில் வசூல் வேட்டை நடத்தியது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் அல்லு அர்ஜுன் உடனே புஷ்பா 2 திரைப்படத்தில் நடிப்பதற்கான வேலைகளில் இறங்கினர். சூட்டிங் தொடங்குவதற்கு முன்பாக டெஸ்ட் போட்டோ சூட் எல்லாம் வெற்றிகரமாக எடுத்து முடிக்கப்பட்டது.
ஆனால் தற்பொழுது ஷூட்டிங் மற்றும் நடைபெறாமல் இருக்கிறது காரணம் சரியான லொகேஷன் கிடைக்காமல் இருப்பதால் படக்குழு தேடிக் கொண்டிருக்கிறாதாம். அனைத்தும் இருந்து லொகேஷன் கிடைக்காமல் இருப்பது தற்போது அல்லு அர்ஜுனுக்கு ரொம்பவும் கவலையை கொடுத்து இருக்கிறதாம்..
இதனால் படத்தின் தேதியின் நாளுக்கு நாள் தள்ளிக் கொண்டே போகிறது எப்படி இருக்கின்ற நிலையில் புஷ்பாபு 2 திரைப்படம் 2024 ல் தான் ரிலீஸ் ஆக அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறி வருகின்றனர். இது அல்லு அர்ஜுன் ரசிகர்களை சற்று வருத்தமடைய செய்ய வைத்துள்ளது ஆனால் ஒரு சிலர் நீங்கள் லேட்டாக எடுத்தாலும் படம் தரமாக எடுத்தால் போதும் என கூறி வருகின்றனர்.