பல கோடி பட்ஜெட்டில் திரைப்படம் உருவாகினாலும் ஒரு கோடி தான் வசூல்..! இருந்தும் விடா முயற்சியில் பிரபல நடிகை..!

kangana-0
kangana-0

தற்பொழுது சினிமா மற்றும் அரசியல் பக்கத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திக் கொண்டு வரும் ஒரு நடிகை தான் கங்கனா ரணவத் இவ்வாறு பிரபலமான நமது நடிகை நடிக்கும் ஒவ்வொரு திரைப்படங்களும் சர்ச்சையில் முடிவுவடைந்தது மட்டுமில்லாமல் தற்போது வரை அவர் தன்னுடைய சிறந்த திறமையின் மூலமாக மூன்று முறை சிறந்த நடிகைக்கான தேசிய விருதை பெற்றுள்ளார்.

அந்த வகையில் சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் தாகத் இவ்வாறு வெளியான இந்த திரைப்படமானது 100 கோடி பொருட்செலவு போட்டு எடுக்கப்பட்ட திரைப்படமாகும் ஆனால் இந்த திரைப்படம் வெறும் மூன்று கோடி மட்டுமே வசூல் செய்தது இதனால் தயாரிப்பு நிறுவனம் மிகப்பெரிய நஷ்டத்தை சந்தித்தது மட்டுமில்லாமல் எட்டாவது நாளிலே வெறும் இருபது டிக்கெட்டுகள் மட்டுமே விற்கப்பட்டது.

ஆனால் தொடர்ந்து இவருடைய திரைப்படங்கள் பிளாக் செய்யப்படுவது இவருடைய நடிப்பில் பிரச்சனையா இல்லை இவருடைய திரைப்படத்தை ஓடாமல் செய்வதற்கு சிலர் பின்னணியில்  வேலை செய்கிறார்களா என்பது தெரியவில்லை. இது ஒரு பக்கம் இருக்க சமீபத்தில் நமது நடிகை முதல் அமைச்சர் ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றில் நடித்திருந்தார்.

இந்த திரைப்படத்திற்கு தலைவி என பெயர் வைக்கப்பட்டிருந்தது. ஆனால் தொடர்ந்து பல திரைப்படங்களில் தோல்வியை மட்டும் சந்தித்து இருப்பதன் காரணமாக அடுத்து தன்னை வைத்து யார் திரைப்படம் இயக்க போகிறார் என்பதைப் பற்றி கொஞ்சம் கூட கவலை படாமல் நமது நடிகை ஒரு அதிரடி முடிவை எடுத்துள்ளார்.

அந்தவகையில் மறைந்த முன்னாள் பிரதமர் வாழ்க்கை வரலாற்றை ஒரு திரைப்படமாக இயக்க உள்ளது மட்டுமில்லாமல் அதில் தானே நடிக்க திட்டமிட்டுள்ளாராம்.  ஏற்கனவே நமது நடிகை 2019ஆம் ஆண்டு மணிகர்ணிகா என்ற திரைப்படம் எடுத்திருந்தால் இந்த திரைப்படத்தில் அவர் நாயகியாக அழகாக காட்டப்பட்டது மட்டுமில்லாமல் வீரமங்கை யாகவும் காட்டப்பட்டார்.

இதனால் இந்த திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது மட்டும் இல்லாமல் வசூல் ரீதியாக மிகப்பெரிய சாதனையை படைத்தது அந்த வகையில் நமது நடிகை இரண்டாவது முறையாக தானே இயக்கி ஒரு திரைப்படத்தை  நடிக்க உள்ளார் என்ற திரைப்படம் இந்திரா காந்தி வாழ்க்கை வரலாற்றை மற்றும் இல்லாமல்  எமர்ஜென்சி காலத்தில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளை மட்டும்  தொகுத்து இந்த திரைப்படத்தை இயக்க திட்டமிட்டுள்ளார்.

இவ்வாறு உருவாகும் இந்த திரைப்படத்திற்கு எமர்ஜென்சி என பெயர் வைக்கப்பட்டுள்ளது மட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தைப் பற்றிய அடுத்தடுத்த அப்டேட்டுகள் மிக விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.