கோடிகளில் சம்பளம் வாங்கும் நயன்தாராவுக்கு கூட மனசு இல்ல.! ஐஸ்வர்யா ராஜேஷ் தடுப்பு பணிக்காக எவ்வளவு கொடுத்தார் தெரியுமா.?

nayanthara-and-ishwariya-rajesh
nayanthara-and-ishwariya-rajesh

தற்பொழுது கொரோனாவால் இந்தியாவில் உள்ள அனைவரும் படாத பாடுபட்டு வருகிறோம் அதோடுமட்டுமல்லாமல் நாள்தோறும் லட்சக்கணக்கான மக்கள் இறந்து வருகிறார்கள். எனவே நாம் அனைவரும் பெரும் இழப்பை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறோம். அதோடு மட்டுமல்லாமல் இந்தியாவிலேயே கொரோனா தொற்று அதிகமாக உள்ள மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது.

கொரோனா தொற்றில் முதலிடம் வகிக்கும் தமிழ்நாட்டில் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு படுக்கையறை இல்லாமலும், ஆக்சிஜன் உள்ளிட்ட இன்னும் பலவற்றைக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எனவே முதலமைச்சர் மு க ஸ்டாலின் அனைவரிடமும் தமிழ்நாட்டை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக நிவாரண உதவியை கேட்டு வருகிறார்.

இப்படிப்பட்ட நிலையில் தொழிலதிபர்கள் பல நடிகர்கள் மற்றும் அரசியல்வாதிகள் என்று பலர் பொதுநல அக்கறை உடன் லட்சக்கணக்கில் தங்களால் முடிந்தவரை நிதி உதவி வழங்கி வருகிறார்கள். அந்தவகையில் திரைப்பிரபலங்கள் பல முன்னணி நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் என்று பலரும் நிதி உதவி வழங்கி உள்ளார்கள்.

ஆனால் இதுவரையிலும் எந்த நடிகையும் நிதிஉதவி வழங்காமல் இருந்து வந்தார்கள். இப்படிப்பட்ட நிலையில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு உதவும் வகையில் ரூபாய் ஒரு லட்சம் பெப்சி தொழிலாளர்களுக்கு ரூபாய் ஒரு லட்சம் நிதி உதவி வழங்கி உள்ளார்.

இவரைத் தொடர்ந்து நிதி அகர்வாலும் ஒரு லட்ச ரூபாய் வாங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.  எனவே இவர்களை ரசிகர்கள் பாராட்டி வருகிறார்கள்.ஆனால் தற்போது சினிமாவில் உச்ச நட்சத்திரமாக கொடிகட்டி பறந்து வரும் நயன்தாரா இதுவரையிலும் ஒரு ரூபாய் கூட கொரோனா நிவாரண நிதியாக தரவில்லை.

எனவே தற்பொழுது அனைத்து தரப்பு ரசிகர்களும் நயன்தாராவை விட ஐஸ்வர்யா ராஜேஷ், நிதி நிதி அகர்வால் போன்றவர்கள் குறைவான சம்பளம் வாங்குபவர்கள் தான் இவர்களுக்கு இருக்கும் மனம் கூட நயன்தாராவுக்கு இல்லையே என்று மிகவும் கோபமடைந்து வருகிறார்கள்.