குட்டிக்கரனம் போட்டாலும் நீங்க நினைக்கிறது நடக்காது..! விஜய்யை விளாசிய பிரபல தயாரிப்பாளர்..

vijay
vijay

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் விஜய் இவர் தற்போது வம்சி இயக்கி உள்ள வாரிசு திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் வருகின்ற பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியாக இருப்பதால் ரசிகர்கள் இந்த படத்தை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும்.

இதை தொடர்ந்து தமிழ் சினிமாவில் அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய் தான் என்றும் இவர்தான் தமிழ்நாட்டில் நம்பர்1 நடிகராக இருந்து வருகிறார் என்று வாரிசு பட இசை வெளியீட்டு விழாவில் பிரபலங்கள் பலரும் பேசி இருந்ததை நாம் அனைவரும் கவனித்திருப்போம். அவர்கள் அப்படி கூறியது மிகப்பெரிய சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து தயாரிப்பாளர் கே ராஜன் பிரபல தனியார் யூட்யூப் சேனல் ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ளார்.

அப்போது அவர் கூறியது என்னவென்றால் ரஜினிகாந்த் பல திரைப்படங்களில் நடித்து மக்கள் மத்தியில் ஒரு இடம் பிடித்தவர். இவர் பல தயாரிப்பாளர்களை காப்பாற்றி உள்ளார் அதன் மூலம் நடிகர் ரஜினி சூப்பர் ஸ்டார் ஆனார். அதுமட்டுமல்லாமல் ரஜினிகாந்த் படத்தை தயாரிக்கும் தயாரிப்பாளர் அடைந்தார்கள் என்றால் 2சதவீதம் மட்டும்தான்.

அப்படியே நஷ்டம் அடைந்த தயாரிப்பாளருக்கு நஷ்ட ஈடாக பணத்தை திருப்பி கொடுத்துவிடுவாராம் ரஜினிகாந்த். இதனால் தான் ரஜினிகாந்த் மக்கள் மத்தியில் சூப்பர் ஸ்டார் ஆக உலா வருகிறார். இப்படி புகழ்பெற்ற ரஜினிகாந்த் இருக்கும்போது சூப்பர் ஸ்டார் பதவியை விஜய்க்கு எப்படி கொடுப்பார்கள். அது மட்டுமல்லாமல் விஜய்யை எப்படி மக்கள் சூப்பர் ஸ்டார் என்று ஏற்றுக் கொள்வார்கள் என்று கே ராஜன் கூறியுள்ளார்.

அதுமட்டுமல்லாமல் நடிகர் சரத்குமாரை சுப்ரீம் ஸ்டார் என்று அழைத்து வருகிறார்கள் அப்படி இருக்கையில் அவர் எப்படி விஜய்யை சூப்பர் ஸ்டார் என்று சொல்லலாம் விஜய் முன் அவரை புகழ்வது தப்பில்லை ஆனால் அதற்கு அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய் தான் என்று புகழ்வதை கொஞ்சம் தவிர்த்துக் கொள்ளலாம்.

என்ன பொறுத்த வரை நம்பர் ஒன் என்பது வெறும் நம்பர் தான் அதுமட்டுமல்லாமல் ஒரு நடிகரை உயர்த்துவது இயக்குனர்கள் மட்டும் தான் அதனால் இயக்குனர்களை மட்டும் நம்பர் 1 நம்பர் 2 என்று கூப்பிடுவதில் எந்த ஒரு தவறும் இல்லை. அஜித்தும் விஜய்யும் சமமான நடிகர்கள்தான் அப்படி இருக்கையில் விஜய் எப்படி சூப்பர் ஸ்டார் ஆக முடியும் என்று விலாசியுள்ளார்.

அது மட்டுமல்லாமல் நம்பர் ஒன் என்பதை படங்கள் தான் தீர்வு செய்ய வேண்டும் அப்படி பிரதீப் ரங்கனாதன் 6 கோடியில் லவ் டுடே படத்தை எடுத்தார் ஆனால் வருமானம் மட்டுமே 100 கோடி வரை லாபம் பார்த்தது அவர்தான் தற்போது நம்பர் ஒன் இடத்தில் இருக்கிறார் என்று கே ராஜன் கூறியுள்ளார்.