குருவா இருந்தாலும் அதெல்லாம் என்கிட்ட ஆகாது..! கமலுக்கே டுவிஸ்ட் கொடுத்த லோகேஷ் கனகராஜ்..!

lokesh
lokesh

தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதை களம் கொண்ட திரைப்படங்களை கொடுத்து வருபவர் தான் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இவ்வாறு பிரபலமான நமது இயக்குனர் தமிழில் மாநகரம் என்ற திரைப்படத்தின் மூலம் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உருவாக்கியது மட்டுமில்லாமல் தமிழ் ரசிகர்களைப் பெருமளவு கவர்ந்து விட்டார்.

அதுமட்டுமில்லாமல் இவர் இயக்கிய முதல் திரைப்படமானது மாபெரும் வெற்றி கண்டதன் காரணமாக பல்வேறு புகழையும் பெயரையும் சம்பாதித்து விட்டார்.அதுமட்டுமில்லாமல் தற்போது நமது இயக்குனர் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குனராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

அந்த வகையில் இவர் மாநகரம் திரைப்படத்திற்காக நடிகர் கார்த்திக்கை வைத்து கைதி என்ற திரைப்படம் கொடுத்திருந்தார். இந்த திரைப்படமானது முழுக்க முழுக்க இரவு நேரத்தில் எடுக்கப்பட்ட சம்பவங்களை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது அதுமட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தில் ஒரு பாடல் அல்லது ரொமான்ஸ் காட்சிகள் என எதுவுமே இடம்பெறாமல் ஹாலிவுட் திரைப்படம் போல் அமைந்தது.

மேலும் இந்த திரைப்படமானது நடிகர் கார்த்திக்கிற்கு  பருத்திவீரன் திரைப்படத்திற்கு பிறகு ஆக ஒரு மறக்கமுடியாத திரைப்படமாக அமைந்துவிட்டது. இது ஒரு பக்கமிருக்க தமிழ் இயக்குனர்கள் பலரும் தற்போது திரைப்படங்களில் நான்கு பாடல்கள் இரண்டு முத்தக் காட்சிகள் என திரைப்படங்களில் லீலைகளை காட்டி வருகிறார்கள்.

அந்த வகையில் தற்போது லோகேஷ் கனகராஜ் தனது குரு என்று சொல்லி வரும் கமலஹாசனை வைத்து விக்ரம் என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார்.  ஆனால் இந்த திரைப்படத்தில் பாடல் காட்சிகள் எதுவும் என்று முழுக்க முழுக்க கதை களம் உள்ள திரைப்படமாக அமைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

மேலும் திரைப்படங்களில் பல மோசமான வார்த்தைகள் செயல்கள் இடம்பெறுவது வழக்கம் தான் ஆனால் இந்த திரைப்படத்தில் எந்த ஒரு மறைவுமின்றி ஒரு சில காட்சிகளை வெளிக்காட்டி இருப்பார்கள். ஆகையால் லோகேஷ் கனகராஜ் இந்த திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர் மத்தியில் மிகுந்துள்ளது.