ஹீரோக்கள் தப்பு செய்தால் கூட ஷங்கர் தான் அடி வாங்குவார்..! பல வருடம் கழித்து உண்மையை கக்கும் பிரபலம்.!

shankar-

பிரம்மாண்ட பட்ஜெட்டில் பல படங்களை இயக்கி வெற்றி மேல் வெற்றியை கண்டவர் ஷங்கர் இவரை ரசிகர்கள் செல்லமாக பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் என அழைப்பது வழக்கம் இவர் தமிழில் கடைசியாக ரஜினியை வைத்து 2.0  என்ற படத்தை எடுத்தார் அதனைத் தொடர்ந்து கமலை வைத்து இந்தியன் 2 படத்தை எடுக்க முயற்சி செய்தார்.

ஆனால் தொடர்ந்து இந்த படத்தின் சூட்டிங்கில் விபத்துக்கள் ஏற்பட்டதால் ஒரு கட்டத்தில் கைவிடப்பட்டது.  ஒரு கட்டத்தில் ஷங்கர்  தெலுங்கு நடிகர் ராம்சரனனுடன் கைகோர்த்து ஒரு புதிய படத்தை எடுத்து வருகிறார் கமலும் மற்ற திரைப்படங்களில் பிசியாக நடித்தார் இருவருமே தற்பொழுது அவரவர் வேலையை முடித்துவிட்டு செப்டம்பர் 13ஆம் தேதி மீண்டும் இந்தியன் 2 படத்தில் இணைப்பார்கள் என தெரிய வருகிறது.

இந்தியன் 2 திரைப்படத்தையே ரசிகர்களும் பெரிய அளவில் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர் இப்படி இருக்கின்ற நிலையில் இயக்குனர் சங்கர் குறித்து முன்னணி நடிகர் சரண்ராஜ் சில விஷயங்களை பகிர்ந்து உள்ளார். நீதிக்கு தண்டனை என்ற படத்தில் நடித்து அறிமுகமானவர் நடிகர் சரண்ராஜ் இந்த படத்தை இயக்கியவர்.

எஸ் ஏ சந்திரசேகர் அப்பொழுது உதவி இயக்குனராக சங்கர் பணியாற்றி உள்ளார். எஸ் ஏ சந்திரசேகர் அடித்த அடித்து நிறைய விஷயங்களை கற்று கொடுத்தாராம் ஹீரோக்கள் தப்பு செய்தால் கூட ஷங்கரை கூப்பிட்டு அடிப்பாராம் சந்திரசேகர் இப்படி அடி வாங்கிய அடி வாங்கி ஷங்கர் அனைத்து விஷயத்தையும் கற்றுக்கொண்டு இன்று சிறந்து விளங்குகிறார் என சரண்ராஜ்.

சமீபத்தில் பேட்டி ஒன்றில் கூறினார். இவர் இவ்வாறு கூறியது தற்போது பலருக்கும் ஆச்சரியத்தை கொடுத்துள்ளது. இயக்குனர் சங்கர் மீது உங்களுக்கு அப்படி என்னதான் கோபம்.. இப்படி சொல்லி இருக்கிறீர்களே எனக் கூறி கமெண்ட் அடித்து வருகின்றனர் ரசிகர்கள்.

saran raj
saran raj