80 மற்றும் 90களில் நடிகை சில்க் ஸ்மிதாவிற்கு பிறகு நடனத்தில் பிரபலமானவர் நடிகை டிஸ்கோ சாந்தி இவர் கிட்டதட்ட 20 ஆண்டுகளாக தமிழ் மற்றும் தெலுங்கு மலையாளம், கன்னடம், ஹிந்தி, ஆகிய மொழிகளில் புகுந்து விளையாடி உள்ளார்.
நடிகை டிஸ்கோ சாந்தி அவர்கள் ஒரு பேட்டியில் சுவாரஸ்யமான தகவல்களை வெளிப்படையாக கூறியுள்ளார். பழம்பெரும் நடிகர் சி எஸ் ஆனந்த் அவர்களின் மகள் தான் டிஸ்கோ சாந்தி இவர் நடிகர் பிரகாஷ்ராஜின் முன்னாள் மனைவியான லலிதா குமாரியின் மூத்த சகோதரி ஆவார்.
டிஸ்கோ சாந்தி கமல், ரஜினி, உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபலமானார். மேலும் இவர் நடனத்தின் மூலம் பிரபலமானதால் பத்திரிக்கையாளர்கள் இவரை டிஸ்கோ சாந்தி என புனைப்பெயர் வைத்து அழைத்தனர்.
நடிகை சில்க் ஸ்மிதா உடன் பல படங்களில் நடித்துள்ள டிஸ்கோ சாந்தி சுமிதாவின் தயாரிப்பில் மூன்று திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சில்க் ஸ்மிதாவிற்கு என்னை ரொம்பவும் பிடிக்கும் எனவும் அதுமட்டுமில்லாமல் நானும் அவரும் நடனம் ஆடி முடித்த பிறகு உன்னுடைய நடனம் நன்றாக இருந்தது என்று பொடி வைத்து பேசி ஜாலியாக அவரை தூண்டி விடுவாராம். நடிகை சில்க் ஸ்மிதாவிற்கு யார் கூட எப்படி பேச வேண்டும் என்று நுணுக்கத்தையும் தெரிந்து வைத்துள்ளாராம்.
மேலும் நடிகர் விஜயகாந்த் நடித்திருந்த ஊமை விழிகள் திரைப்படத்தில் மனோஜ் மற்றும் கியான் இசையமைத்துள்ளார்கள் இந்த படத்தில் வரும் அனைத்து பாடல்களும் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது அதில் ராத்திரி நேரத்து பூஜையில் என்ற பாடல் இன்று வரையிலும் ரசிகர்கள் கேட்டு வருகின்றனர் அது மட்டும் இல்லாமல் இந்த பாடலை யூடியூபில் பல ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.
மேலும் நடிகை டிஸ்கோ சாந்தி அவர்கள் ஒரு சில நடிகைகள் உடல் முழுக்க துணியை சுத்தி கொண்டு வந்தாலும் அது டைட்டாக இருந்தால் அவர்களைப் பார்த்து காரி துப்பதான் தோணும் ஆனால் ஒரு சில நடிகை அதாவது நடிகை நயன்தாரா அஜித்துடன் நடித்த பில்லா திரைப்படத்தில் நீச்சல் உடையில் வந்து இருப்பார் அந்த திரைப்படத்தில் நயன்தாரா அவர்கள் மிகவும் அழகாக இருப்பார் என்று அவர் கூறியுள்ளார்.