80, 90 காலகட்டங்களில் இருந்து தமிழ்சினிமாவில் வெற்றிநடை போட்டுக்கொண்டு சிறப்பாக வலம் வருபவர் நடிகர் கமல்ஹாசன் இவரைத் தொடர்ந்து இவரது மகள் சுருதிஹாசன் மற்றம் அக்ஷராஹாசன் இருவரும் சினிமாவில் வெற்றிக் கொடி நாட்டி வருகின்றனர்.
அதிலும் குறிப்பாக ஸ்ருதிஹாசன் தமிழில் ஏழாம் அறிவு, 3 போன்ற அடுத்தடுத்த சூப்பர் ஹிட் படங்களில் நடித்ததன் மூலம் தனது சினிமா பயணத்தை பெரிய அளவில் உயர்த்திக் கொண்டார். தற்போது இவர் தமிழை தாண்டி மற்ற மொழிகளான தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் போன்றவற்றிலும் சிறப்பாக பயணிக்கிறார்.
சுருதிஹாசன் நீண்ட இடைவெளிக்கு பிறகு தமிழில் விஜய் சேதுபதியுடன் இணைந்து லாபம் என்ற திரைப்படத்தில் ஜோடி போட்டு நடித்துள்ளார் இந்த திரைப்படம் செப்டம்பர் 9ம் தேதி வெளியாக இருக்கிறது.
சமிபகாலமாக மற்ற மொழி படங்களில் நடிக்க அதிகம் ஆர்வம் காட்டுவதால் வருகின்ற காலகட்டங்களில் தமிழில் நடிப்பாரா என்பது ஒரு கேள்விக்குறியாக இருக்கிறது. அப்படியும் தமிழில் நடித்தாலும் கூட நடிகர் சிவகார்த்திகேயன்னுடன் மட்டும் இனி நடிக்க போவதில்லை என எடுத்தெறிந்து பேசி உள்ளார் சுருதிஹாசன்.
என்ன காரணம் என தெரியாமல் இருந்து வந்த நிலையில் youtube பிரபல விமர்சகர்கள் இதற்கு பதில் அளித்துள்ளனர். கமல் பற்றி மேடை ஒன்றில் சிவகார்த்திகேயன் தவறாக பேசியதாக கூறி சில வருடங்களுக்கு முன் மதுரை விமான நிலையத்தில் கமல் ரசிகர்கள் சிவகர்த்திகேயனனை வெறுப்யேற்றியது வைரலானது.
இந்த காரணத்தினால் சிவகார்த்திகேயனுடன் நடிக்க மாட்டேன் என்று கூறுகிறார்உண்மையில் சிவகார்த்திகேயன் தான் ஸ்ருதிஹாசனுடன் நடிக்க மாட்டேன் என கூறியிருக்க வேண்டும் ஆனால் இது வேடிக்கையாக இருக்கிறது என கூறி வருகின்றனர் ரசிகர்கள்.