3 கோடி இல்ல 5 கோடி கொடுத்தாலும் கூட இந்த விஷயத்தை மட்டும் செய்யவே மாட்டேன் – ரசிகர்கள் எனக்கு மிக முக்கியம் நடிகை சாய்பல்லவி அசத்தல்.

sai-pallavi-
sai-pallavi-

மலையாள சினிமாவில் வெளியான பிரேமம் என்ற திரைப்படத்தில் நடித்து பட்டி தொட்டியெங்கும் பிரபலம் ஆனார். அதன் பின் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் உச்ச நட்சத்திரங்கள் படங்களில் நடித்து தனது மார்க்கெட்டை அதிக அளவில் உயர்த்திக் கொண்டு தென்னிந்திய சினிமா உலகில் தவிர்க்க முடியாத நாயகியாக வலம் வருபவர் நடிகை சாய் பல்லவி.

சினிமாவுலகில் தொடர்ந்து நடிகை சாய் பல்லவிக்கு பட வாய்ப்புகள் வந்தாலும் நல்ல கதைகளை மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் மேலும் சினிமாவில் பெருமளவு கவர்ச்சியை காட்டாத நடிகைகளில் ஒருவர் சாய்பல்லவி என்பது குறிப்பிடதக்கது. இருப்பினும் இவரது அழகு மற்றும் திறமையை பார்த்து பின்பற்றுவோரும் ரசிகர்களின் எண்ணிக்கை மட்டுமே கோடிக்கணக்கில் இருக்கிறது என்பது குறிப்பிடதக்கது.

இந்த நிலையில் நடிகை சாய் பல்லவியை அழகு சாதன நிறுவனம் ஒன்று நாடி உள்ளது ஆம் தனது விளம்பர படத்தில் நடித்தால் உங்களுக்கு இரண்டு கோடி தருவதாக முதலில் பேசியது ஆனால் அவரோ நடிக்க முடியாது என சொல்ல படிப்படியாக சம்பளத்தை 3 கோடி, ஐந்து கோடி என உயர்த்திக் கொண்டே போனது.

ஆனால் நடிகை சாய் பல்லவி அந்த விஷயத்தில் கறாராக முடியாது என திட்டவட்டமாக கூறிவிட்டார் அதற்கான காரணத்தையும் அண்மையில் தெரிவித்திருந்தார் அதில் அவர் சொன்னது எனது தங்கை மாநிறம் தான் அவள் அழகாக மாற வேண்டும் என்பதற்காக நீ காய்கறிகளை அதிகமாக எடுத்துக் கொள் என கூறினேன் இப்போது அவர் அளவுக்கு அதிகமாக அதிக காய்கறிகளை எடுத்து சாப்பிட்டு வருகிறார்.

அதேபோல்தான் இப்பொழுது நான் எதையாவது ஒன்றை தெரிவித்தால் அதை ரசிகர்கள் அதிக அளவில் பின்பற்றுவார்கள். பொதுவாக நாம் யாரை  நீங்கள் அழகாக இல்லை என்று சொன்னால் அழகாக அதற்காக எந்த விலையைக் கொடுத்தாக வேண்டும் என நினைப்பவர்கள் உண்டு அதுபோல் இப்பொழுது இந்த விளம்பர படத்தில் நடித்தால் சரியாக இருக்காது என்று கருதிதான் விட்டு விட்டதாக அவர் கூறி உள்ளார்.