நடிகை ஜோதிகா வாலி திரைப்படத்தில் நடித்து சினிமா பயணத்தை ஆரம்பித்தார் முதல் படமே இவருக்கு வெற்றி படமாக அமைந்ததால் அதன் பிறகு தமிழ் சினிமாவில் ஏராளமான வாய்ப்புகள் கிடைத்தன குறிப்பாக அஜித், விஜய், சூர்யா போன்றவர்களுடன் நடித்து தனது மார்க்கெட்டை மிகப்பெரிய அளவில் உயர்த்தி கொண்டார்.
தொடர்ந்து வெற்றியை நோக்கி ஓடிய ஜோதிகா ஒரு கட்டத்தில் நடிகர் சூர்யாவை காதலித்து பின் திருமணம் செய்து கொண்டார் இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் இருக்கின்றனர். இப்பொழுதும் நடிகை ஜோதிகா தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார் அதிலும் குறிப்பாக சோலோ படங்களில் நடிக்க வாய்ப்புகள் ஏராளமாக குவிந்து வருகின்றன அந்த வகையில் 36 வயதினிலே, ராட்சசி என சொல்லிக் கொண்டே போகலாம்.
வயது ஒரு பக்கம் ஜோதிகாவுக்கு ஏறிக்கொண்டு போனாலும் மறுபக்கம் வாய்ப்புகள் குவிந்து கொண்டுதான் இருக்கின்றன 40 வயதாகும் இவருக்கு இப்பொழுதும் பட வாய்ப்புகள் குவிகிறது இது மற்ற நடிகைகளை ஆச்சரியமாக வைத்துள்ளது சமீபத்திய பேட்டி ஒன்றில் அவரே சொன்னது.
எனக்கு தற்பொழுது 40 வயதாகிவிட்டது இந்த வயதிலும் எனக்கு இப்படி பல பட வாய்ப்புகள் வந்து கொண்டுதான் இருக்கின்றன நான் இதை திட்டமிடவில்லை தயாராகவும் இல்லை யோசிக்கக்கூட இல்லை ஆனால் வாய்ப்புகள் வந்து கொண்டே இருக்கின்றன என சந்தோஷத்துடன் கூறியுள்ளார் ஜோதிகா.
சினிமாவில் வயது அழகு முக்கியமில்லை திறமை தான் முக்கியம் அதைத்தொடர்ந்து வெளிகாட்டினாலே வெற்றியை ருசிக்கலாம் அது இதற்கு ஒரு உதாரணம் காரணம் அண்மைக்காலமாக ஜோதிகா தேர்ந்தெடுத்து நடிக்கும் திரைப்படங்களில் அவரது திறமையும் வளர்ந்து கொண்டே இருக்கிறது அந்த காரணத்தினால் வாய்ப்புகளும் குவிந்து கொண்டே இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.