20 வருஷம் ஆனாலும் அது மட்டும் கொஞ்சம் கூட குறையல..! மாதவன் பற்றி நடிகை சிம்ரன்..!

simran-044

தமிழ் சினிமாவில் நடிகர் மாதவன் உடன் இணைந்து சிம்ரன் சமீபத்தில் நடித்து வெளிவந்த ராக்கெட்டரி திரைப்படம் ஆனது இன்று வெளியாகி ரசிகர்களின் மத்தியில் நல வரவேற்பை பெற்று தந்துள்ளது அந்த வகையில் இந்த திரைப்படமானது மாபெரும் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் நடிகை சிம்ரன் அவர்கள் தான் மாதவனுடன் நடித்த அந்த அனுபவங்கள் குறித்த சமூக வலைதள பக்கத்தில்  நெகிழ்ச்சியான பதிவை வெளியிட்டுள்ளார். இவ்வாறு மாதவன் மற்றும் சிம்ரன் ஆகிய இருவரும் இந்த திரைப்படம் மட்டும் இன்றி இதற்கு முன்பாக ஒரு சில திரைப்படங்களில் இணைந்து நடித்துள்ளார்கள்

அந்த வகையில் பார்த்தாலே பரவசம் என்ற திரைப்படத்தை கே பாலச்சந்தர் இயக்கியிருந்தார் அதேபோல மணிரத்தினம் இயக்கத்தில் கன்னத்தில் முத்தமிட்டால் என்ற திரைப்படத்திலும் நடித்துள்ளார்கள் இதனை தொடர்ந்து தற்பொழுது இவர்கள் இருவரும் இணைந்து நடித்த ராக்கெட்டரி படம்  நல்ல விமர்சனத்தை கொடுத்துள்ளது

அந்த வகையில் தான் இதற்கு முன்பாக நடித்த கேரக்டர்களை பற்றி பேசிய சிம்ரன் அவர்கள் சமீபத்தில் இந்த திரைப்படத்தில் எனக்கு மிஸ்ஸஸ் நம்பி நாராயணன் என்ற கேரக்டர் மிகவும் பிடித்துள்ளது. அது மட்டும் இல்லாமல் இந்த 20 வருடங்களில் மாதவனின் கேரக்டர் கொஞ்சம் கூட மாறவில்லை என்றும்  அவர் தெரிவித்துள்ளார்.

simran-11
simran-11

மேலும் மீண்டும் மாதவனுடன் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது எனக்கு மிகவும் பிடித்துள்ளது. மேலும் இந்த திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் என வாய்ப்பு கொடுத்த அனைவருக்கும் தன்னுடைய மனமார்ந்த நன்றியை நடிகை சிம்ரன் தெரிவித்துள்ளார்.