இப்படி படம் எடுத்த பாம்பு கூட கீரிகிட்ட தொத்துபோகும்..! அன்றே கோப்ரா தோல்வியை கணித்த தளபதி விஜய்..!

vijay
vijay

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தான் தளபதி விஜய் இவ்வாறு பிரபலமான நமது நடிகர் பல ஆண்டுகளுக்கு முன்பாக மேடையில் ஒரு வார்த்தையை கூறியுள்ளார் அதாவது அவர் கூறியது என்னவென்றால் இரண்டரை மணி நேரத்துக்கு மேலாக திரைப்படம் எடுத்தால் அது கண்டிப்பாக தோல்விதான் அடைந்து விடும்.

என்று அவர் கூறிய வார்த்தை இன்று சமூக வலைதள பக்கத்தில் வைரலாக பரவி வருகிறது சமீபத்தில் சியான் விக்ரம் நடிப்பில் மிக பிரம்மாண்டமாக எடுக்கப்பட்ட திரைப்படம் தான் கோப்ரா இந்த திரைப்படத்தினை ஏ ஆர் முருகதாஸ் அவர்களின் உதவி இயக்குனராக பணிபுரிந்த இயக்குனர் தான் இயக்கி உள்ளார் இவர் டிமான்டி காலனி, இமைக்கா நொடிகள் போன்ற பல்வேறு திரைப்படங்களை இயக்கிய வெற்றி கண்டுள்ளவர்.

மேலும் இந்த திரைப்படத்தில் நடிகர் விக்ரமுக்கு ஜோடியாக ஸ்ரீநிதி செட்டி,நாய்டு மீனாட்சி, பூவையார், ரோபோ சங்கர், இர்பான் பதான், ஆனந்த்ராஜ் போன்ற பல்வேறு நட்சத்திர பட்டாளங்களை நடித்துள்ளார்கள் அதுமட்டுமில்லாமல் ஆகஸ்ட் 31ஆம் தேதி விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வெளிவந்த இந்த திரைப்படம் நான்கு மொழிகளில் ரிலீஸ் ஆகி உள்ளது.

மேலும் இந்த திரைப்படத்தில் நடிகர் விக்ரம் அவர்கள் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது அதேபோல இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் அவர்கள் தான் இசையமைத்துள்ளார் பொதுவாக தமிழ் திரைப்படங்கள் இரண்டரை மணி நேரத்துக்கு எடுக்கப்படும் ஆனால் இந்த திரைப்படம் மிகவும் நீளமாக மூன்று மணி நேரத்திற்கு மேல் எடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு படம் மிக அதிக நேரம் இருப்பதன் காரணமாக பார்க்கும் ரசிகர்கள் பலரும் ஏன் இவ்வளவு நீளமாக படத்தின் கதையை இழுத்து உள்ளீர்கள் என்று அவர்களின் விமர்சனங்களையும் வேண்டுகோளையும் வைத்துள்ளார்கள்.

அதுமட்டுமில்லாமல் தளபதி விஜய் அவர்கள் 2.5 மணி நேரத்திற்கு மேலாக எந்த ஒரு நல்ல திரைப்படங்கள் வெளிவந்தாலும் அவை தோல்வியையே சந்திக்கும் என ஒரு வீடியோவை சில ஆண்டுகளுக்கு முன்பாக வெளியிட்டது தற்பொழுது சமூக வலைதள பக்கத்தில் வைரலாக பரவி வருகிறது.

அதேபோல அவர் கூறியது என்னவென்றால் இளம் இயக்குனர்கள் புது புது ஐடியாக்களை யூஸ் செய்து திரைப்படங்கள் எடுத்து வருகிறார்கள் அந்த வகையில்  உங்களுடைய கதையை இரண்டரை மணி நேரத்துக்குள் சொல்லி விடுங்கள் அப்படி இல்லை என்றால் ரசிகர்கள் வாட்ச்சை பார்க்க ஆரம்பித்து விடுவார்கள்.

அதுமட்டுமில்லாமல் மிக நீளமாக படம் எடுத்தால் பாம்பு கூட கீரி கிட்ட தோத்துப் போகும் என அவர் பேசிய வார்த்தைகள் கோப்ரா திரைப்படத்திற்கு அப்படியே பொருந்தி உள்ளது இதனை நெட்டிசன்கள் சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு வைரலாக்கி வருகிறார்கள்.