Ethirneechal : எதிர்நீச்சல் சீரியலில்அருண் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வரும் சாணக்யா சில திரைப்படங்களில் நடித்துள்ளார் அது குறித்து இங்கே காணலாம்.
சன் தொலைக்காட்சியில் எத்தனையோ சீரியல்கள் ஒளிபரப்பப்பட்டு வந்தாலும் எதிர்நீச்சல் சீரியலுக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இருந்து வருகிறது. இந்த சீரியலை காண மக்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள், அது மட்டும் இல்லாமல் ப்ரோமோ வீடியோவை மக்கள் அதிகமாக பார்த்து வருகிறார்கள். சில வாரங்களுக்கு முன்பு டிஆர்பி யில் முதலிடம் பிடித்த கயல் சீரியலை பின்னுக்கு தள்ளி எதிர்நீச்சல் தொடர் முதலிடம் பிடித்தது.
எதிர்நீச்சல் தொடர் முதலிடத்தை பிடித்ததற்கு காரணம் ஆதிரை திருமணம் தான் திருமணம் எப்படி நடக்கப்போகிறது எங்கு நடக்கப்போகிறது என்பதை மக்கள் ஆவலுடன் பார்த்தார்கள். எதிர்நீச்சல் சீரியலுக்கு இல்லத்தரசிகள் முதல் இளம் ரசிகர்கள் வரை அதிகமாக கவர்ந்து விட்டது. அதேபோல் கரிகாலன் மற்றும் ஆதிரை திருமண காட்சிகளை தான் மக்கள் அதிக அளவில் பார்த்தார்கள்.
எதிர்நீச்சலில் நடித்து வரும் ஆதிரையை காதலிப்பதாக இந்த தொடரில் நடித்து வருபவர் அருண் என்கின்ற சாணக்யா இவர் சிறு வயதில் இருந்து திரைப்படங்களிலும் சின்னத்திரையிளும் நடித்து வருகிறார். இவர் வேறு யாரும் கிடையாது சின்னத்திரை நடிகை கீதா ஸ்டீயின் மகன் தான் சாணக்யா.
இவர் முதன்முதலாக மெட்டிஒலி என்ற சீரியலில் அறிமுகமானார் அந்த சீரியலில் கோபியின் மகனாக நடித்திருந்தார் முருகதாஸ் இயக்கத்தில் கஜினி திரைப்படத்தில் நடிகர் அசின் உடன் விளம்பர படப்பிடிப்பு காட்சியில் நடித்திருப்பார்.
இதனை தொடர்ந்து அஜித் நடிப்பில் வெளியேகிய பரமசிவம் என்ற திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் சாணக்கியன் நடித்திருந்தார் அதுமட்டுமில்லாமல் மலையாள திரைப்படமான கடல் திரைப்படத்திலும் அவள் பெயர் தமிழரசி என்ற திரைப்படத்தில் ஜெய் அவர்களுடன் சிறு வயது கதாபாத்திரத்திலும் நடித்திருந்தார்.
மேலும் பல விளம்பர திரைப்படங்களிலும் நடித்து வந்தார் இந்த நிலையில் தற்பொழுது எதிர்நீச்சல் சீரியலில் அருண் என்கின்ற சாணக்கியன் நடித்து வருகிறார்.