Ethirneechal vela ramamoorthy : சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் எதிர்நீச்சல் சீரியல் மக்கள் மத்தியில் நன்கு பிரபலமடைந்து வந்தது இந்த சீரியலுக்கு முதுகெலும்பாக இருந்தவர் மாரிமுத்து தான் இவர் இந்த சீரியலில் ஆதி குணசேகரனாக நடித்து மிரட்டி வந்தார். நக்கல், நையாண்டி, கோபம் என அனைத்தையும் இந்த சீரியலில் வெளி காட்டி வந்தார்.
ஆனால் திடீரென மாரிமுத்துவுக்கு மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்ததால் அதன் பிறகு ஆதி குணசேகரன் கதாபாத்திரத்தில் யார் நடிக்க போகிறார் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் இருந்த நிலையில்அந்த இடத்தை நிரப்ப வேல ராமமூர்த்தி உள்ளே வந்தார். ஆனாலும் மாரிமுத்து லெவலுக்கு வேல ராமமூர்த்தி நடிக்கவில்லை என பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
அது மட்டும் இல்லாமல் சமீபத்திய எபிசோடில் ஆதி குணசேகரன் ஆக நடித்த வேல ராமமூர்த்தியை போலீஸ் அரெஸ்ட் செய்வது போல் காட்சி வெளியாகியது அதன் பிறகு குணசேகரனை அதிகமாக காட்டாமல் இருந்து வருகிறார்கள் அதற்கான காரணம் தற்போது தெரியவந்துள்ளது. வேல ராமமூர்த்தி தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் தான் எங்கு இருக்கிறேன் என்ற தகவலை வெளியிட்டுள்ளார்.
அந்த வகையில் எதிர்நீச்சல் சீரியலின் எதிர்பார்ப்பும் பரபரப்பும் மக்களிடையே இருந்து வரும் நிலையில் இனி எதிர்நீச்சல் சீரியலில் நடக்கப் போவது என்ன என்பதை காண ரசிகர்கள் ஆவலுடன் இருக்கிறார்கள் இதுவரை கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் ஒளிபரப்பப்பட்டு வந்த சீரியல் 5 வருடங்கள் ஒளிபரப்பப்படும் என இயக்குனர் கூறியிருந்தார்.
கதையில் வேகம், நடிப்பு, திறமை என அனைத்தையும் வைத்து வித்தியாசமான காட்சிகளை வடிவமைத்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. அதேபோல் வேல ராமமூர்த்தி அறிமுகமான முதல் நாளே தான் வேற ரகம் என்றதை நிரூபிக்கும் வகையில் தன்னுடைய நடிப்பை தத்துரூபமாக காட்டியிருந்தார்.
இன்னும் தொடர்ந்து தன்னுடைய நடிப்பு திறமையை வெளிக்காட்டினாலே ரசிகர்களுக்கு வெகுவாக பிடித்து விடும் ஆனால் இந்த நிலையில் திடீரென ஜெயிலுக்கு போவது போல் காண்பித்து விட்டார்கள் ஆனால் தற்பொழுது பாரீஸில் தான் இவரின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது அதற்காக தான் அங்கு சென்றுள்ளார் என பலரும் கூறிவந்த நிலையில்.
சீரியலில் சில காட்சிகளில் நடித்துவிட்டு தன்னுடைய படங்களை அனைத்தையும் முடித்துவிட்டு தான் மீண்டும் எதிர்நீச்சல் சீரியலில் நடிக்க வருவார் என தெரிய வருகிறது அதனால் தான் ஜெயிலுக்கு போவது போல் காட்சிகளை வைத்துள்ளார்கள் இயக்குனர் என பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.