Ethirneechal : எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரன் இல்லாததால் சீரியல் கொஞ்சம் மந்தமாக சென்று கொண்டிருக்கிறது இந்த நிலையில் நேற்றைய எபிசோடில் சாதா செருப்பை வைத்து சீரியலை கடத்தி விட்டார்கள் மற்றொரு பக்கம் நந்தினி தன்னுடைய சமையல் ஆர்டரை முடிப்பதற்காக பரபரப்பாக சமைத்துக் கொண்டிருக்கிறார் அது மட்டும் இல்லாமல் சமைத்து முடித்துவிட்டு வெளியே எடுத்துச் செல்ல முயற்சி செய்யும்பொழுது அந்த சமயத்தில் கதிர் மற்றும் ஞானம் என்ட்ரி கொடுக்கிறார்.
அதற்குள் நந்தினி அனைத்தையும் மறைத்து வைத்து விடுகிறார் ஆனாலும் கதிர் கண்டுபிடித்து விடுகிறார் இத்துடன் நேற்றைய எபிசோடு முடிந்தது இன்று என்ன நடக்கும் என்பதை பார்க்கலாம் புதிய ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.
அந்த வீடியோவில் சொன்ன நேரத்தில் சமையல் ஆர்டரை டெலிவரி செய்ய முடியாமல் நந்தினி தவிர்த்து வருகிறார் அதற்குள் பெண் வீட்டார் வீட்டிற்கு வந்து அவர் காசு வாங்கிக்கொண்டு ஏன் உணவு டெலிவரி செய்யவில்லை என சத்தம் போடுகிறார் உடனே கடுப்பான நந்தினி தான் அணிந்திருந்த தாலி செயினை கழட்டி உங்களுக்கு அட்வான்ஸ் பணம் தானே வேண்டும் எடுத்துக் கொள்ளுங்கள் என கூறுகிறார்.
உடனே விசாலாட்சி நிறுத்தடி குத்து கல்லு மாதிரி உன் புருஷன் உசுரோட இருக்கான் நீ தாலிய கழுட்டுறியா என கேட்க உடனே அவங்க மரியாதை கொடுத்தா நாங்களும் மரியாதை கொடுப்போம் என்ன பொருத்தவரை இது வெறும் செயின் தான் என நந்தினி கூற அதற்கு விஷாலாச்சி அதற்காக அறுத்து போட்டு விடுவியா என கேட்க உடனே நந்தினி ஆமாம் என கத்துகிறார். இதனால் கடுப்பான விஷாலாச்சி ன்னத்தில் ஓங்கி ஒரு அரை வைக்கிறார்.
இதனால் நந்தினி அதிர்ச்சி அடைகிறார் மற்றொரு பக்கம் ஜீவானந்தத்தின் மகளைப் பார்த்து இந்தப் பெண் யார் என கேட்க ஈஸ்வரி உனக்கும் இதுக்கும் எந்த ஒரு சம்பந்தமும் கிடையாது என கூறுகிறார்கள் இத்துடன் இந்த ப்ரோமோ வீடியோ முடிகிறது.