தானா வந்து வலையில் மாட்டிக் கொண்ட ஜீவானந்தம்.! முடிச்சு விட பார்க்கும் கதிர்.! எதிர்நீச்சல் பரபரப்பான திருப்பங்கள்.

ethirneechal today promo october 14
ethirneechal today promo october 14

Ethirneechal : சன் தொலைக்காட்சியில் எதிர்நீச்சல் சீரியல் மிகவும் பரபரப்பாக ஒளிபரப்பப்பட்டு வருகிறது இந்த சீரியல் டிஆர்பி யில் முதலிடம் வகித்து வருகிறது. இந்த நிலையில் எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரன் ஆக நடத்து  வந்தார் மாரிமுத்து இவரின் மறைந்த பிறகு தற்பொழுது குணசேகரனாக வேல ராமமூர்த்தி நடித்த வருகிறார்.

இவர் சீரியலுக்குள் என்ட்ரி கொடுத்ததும் இவரின் நடிப்பு எப்படி இருக்கிறது குணசேகரன் கதாபாத்திரத்திற்கு ஒத்து வருவாரா  என பலரும் சீரியலை கண்காணித்து வந்தார்கள் அதனால் தான் டிஆர்பிஇல் பலத்த மாற்றம் ஏற்பட்டது என பலரும் கூறி வருகிறார்கள்.

இந்த நிலையில் சமீபத்திய எபிசோடில் ஜனனியின் அப்பா ஜெயிக்கிற வரைக்கும் நீ என் மகளே கிடையாது என்னுடைய குடும்ப விஷயத்தில் நீ தலையிடக்கூடாது என கூறுகிறார். நீ ஜெயிக்கிறியான்னு பார்க்கலாம் எனக்கூறி விட்டு செல்கிறார். வர்ற வழியில் ஜனனியின் அப்பாவை கதிர் ஞானம் இருவரும் பார்க்கிறார்கள் இவர் எதற்கு வந்துட்டு போனார் வீட்டுக்கு போனால் தான் தெரியும் என வீட்டிற்கு வருகிறார்கள்.

இந்த நிலையில் புதிய ப்ரோமோ வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது இந்த ப்ரோமோ வீடியோவில் அப்பத்தா ஒரு சிறிய பங்க்ஷன் வச்சிருக்கேன் அதுக்கு நீங்க எல்லாரும் வரணும் என கூறுகிறார் அதுமட்டுமில்லாமல் இந்த பங்க்ஷனுக்கு தலைமை தாங்குவது ஜனனிதான் என கூறுகிறார் உடனே கதிர் கைதட்டுகிறார்.

அதுமட்டுமில்லாமல் இன்னொரு பக்கம் அந்த ஜீவானந்தம் வலிய வந்து வலையில் மாட்டுகிறான் அவன இந்த முறை முடித்து விட்டுடனும் தப்பிக்க கூடாது என ஞானத்திடம் கதிர் பேசிக் கொண்டிருக்கிறார் இதனை மேலே நின்று ஈஸ்வரி பார்த்து விடுகிறார்.

திடீரென ஈஸ்வரி ஜீவானந்தம் வீட்டிற்கு செல்கிறார் ஜீவானந்தத்தின் மகள் ஈஸ்வரி ஆண்ட்டி வந்துள்ளார்கள் எனக் கூற ஜீவானந்தம் எதற்காக வந்து உள்ளீர்கள் என கேட்க பாக்கணும்னு தோணுச்சு அதனால்தான் வந்தேன் என கூறுகிறார் இத்துடன் ப்ரோமோ வீடியோ முடிகிறது.