Ethirneechal promo : சன் தொலைக்காட்சியில் எத்தனையோ சீரியல்கள் ஒளிபரப்பப்பட்டு வந்தாலும் எதிர்நீச்சல் சீரியலுக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இருந்து வந்தது ஆனால் மாரிமுத்து இறந்ததற்கு பிறகு டிஆர்பிஇல் பலத்த அடிவாங்கியது எதிர்நீச்சல் தற்போது நான்காவது இடத்தில் தான் எதிர்நீச்சல் இருந்து வருகிறது.
மாரிமுத்து கதாபாத்திரத்தில் தற்பொழுது வேல ராமமூர்த்தி தான் நடித்த வருகிறார் தர்ஷினி காணாமல் போனதற்கு பிறகு நாம் எதிர்பார்க்காத பல மாற்றங்கள் நிகழ்ந்துவிட்டது. கதிர் ஞானம் இருவரும் தன்னுடைய அண்ணன் ஆதி குணசேகரன் அடிமையாக வைத்திருந்ததை உணர்ந்துவிட்டார்கள் அதனால் அவருக்கு எதிராக மாறிவிட்டார்கள்.
கோமதி செய்த தவறால் அசிங்கப்பட்டு நிற்கும் பாண்டியன்.! கதிரை கொள்ள வரும் ராஜியின் சித்தப்பா…
அதேபோல் காணாமல் போன தர்ஷனியை தேடாமல் தேடிச் சென்ற ஜனனி, நந்தினி, ஈஸ்வரி, ரேணுகா, ஜீவானந்தம், ஆகியோர் மீது போலீசில் புகார் கொடுத்து விட்டார். தர்ஷினியை எங்கு தேடியும் கிடைக்கவில்லை கடைசியாக அவரை அடைத்து வைத்திருந்த இடத்திற்கு சென்றும் அவர் அங்கு இல்லை இதனால் போலீஸ் ஜீவானந்தத்தை கைது செய்தது.
பிறகு ஈஸ்வரி நந்தினி ரேணுகா ஜனனி என அனைவரையும் போலீசார் கைது செய்து போலீஸ் ஸ்டேஷனில் உட்கார வைத்துள்ளார்கள் இதனை அறிந்த ஞானம் கதிர் சக்தி என அனைவரும் போலீஸ் ஸ்டேஷனுக்கு வருகிறார்கள்.
விவாகரத்து செய்தாலும் இனி இரண்டாவது திருமணம் வேண்டாம் என முரட்டு சிங்கிளாக வாழும் 4 நடிகர்கள்.!
காவல் நிலையத்தில் அனைவரும் உட்கார்ந்திருக்கும் பொழுது ரேணுகா மற்றும் நந்தினியை விசாரிக்க வேண்டும் என உள்ளே அழைத்துச் சென்று அடிஅடி என அடித்து முகத்தை வீங்க வைத்து ரத்தக்காயத்துடன் வெளியே அனுப்புகிறார்கள் நந்தினி வெளியே வரும் பொழுது உடல் முழுக்க வீங்கி இரத்த காயத்துடன் வெளியே வருகிறார் இதனை பார்த்த கதிர் அதிர்ச்சியில் உறைந்து போகிறார் இனிமேல் என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.