இது சும்மா ட்ரையல் தான்மா.. மெயின் பிக்சர் இனிமேல்தான் இருக்கு.! இந்த வார சீரியல் டிஆர்பி ரேட்டிங்.!

tamil serial trp rating
tamil serial trp rating

Ethirneechal serial trp rating : எதிர்நீச்சல் சீரியலில் ஆதி குணசேகரன் ஆக நடித்து வந்த மாரிமுத்து திடீரென மாரடைப்பால் மரணம் அடைந்ததால் அவருக்கு பதில் ஆதி குணசேகரன் கதாபாத்திரத்தில் வேல ராமமூர்த்தி நடிக்க தொடங்கினார். விஜய் தொலைக்காட்சியில் இரவு 9.30 மணிக்கு பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பப்படுவதால் உடனே சன் தொலைக்காட்சி எங்கு டிஆர்பி யில் அடி வாங்கி விடுமோ என எண்ணி எதிர்நீச்சல் சீரியலை இரவு 9 மணிக்கு மாற்றினார்கள்.

இதன் நிலையில் இந்த வாரத்திற்கான டிஆர்பி பட்டியல் தற்பொழுது வெளியாகி உள்ளது இதில் சன் தொலைக்காட்சியில் அனைத்து நாட்களிலும் எதிர்நீச்சல் சீரியல் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இந்த தொடரில் ஆதி குணசேகரன் கதாபாத்திரம் பெரும்பாலான மக்களை கவர்ந்து இழுத்து வந்தது. இந்த தொடரில் நடித்து வந்த மாரிமுத்து மறைந்த பிறகு தற்பொழுது வேல ராமமூர்த்தி அந்த இடத்தை பூர்த்தி செய்துள்ளார்.

ஆனால் ஆதி குணசேகரன் கதாபாத்திரத்தை யாராலும் நிரப்ப முடியாது என பலதரப்பு மக்கள் கருத்து தெரிவித்தார்கள். அதேபோல் வேல ராமமூர்த்தியால் கோபத்தை மட்டுமே காட்ட முடிகிறது நக்கல் நையாண்டி கலந்த குணசேகரன் ஆக வேல ராமமூர்த்தியால் நடிக்க முடியவில்லை. இந்த நிலையில் தற்போது டிஆர்பி பட்டியல் வெளியாகி உள்ளது.

இந்த பட்டியலில் எதிர்நீச்சல் சீரியல் 11.54 புள்ளிகளை பெற்று முதலிடத்தில் இருக்கிறது இதற்கு முந்தைய வாரங்களில் இருக்கும் டிஆர்பி ரேட்டிங்கை விட இந்த வாரம் எதிர்நீச்சல் சீரியல் டிஆர்பி ரேட்டிங் அதிகம் என கூறப்படுகிறது.

அதேபோல் இரவு 9:30 மணிக்கு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் பிக்பாஸ் ஏழாவது சீசன் 4.17 புள்ளிகள் மட்டுமே பெற்றுள்ளது. குறிப்பாக மாரிமுத்து நடிக்கும் போது எதிர்நீச்சல் சீரியலின் டிஆர்பி 10 புள்ளிகளுக்கு மேல் மட்டுமே பெற்று வந்த நிலையில் வேல ராமமூர்த்தி எதிர்நீச்சல் சீரியலில் தலை காட்டியவுடன் 11.54 புள்ளிகள் பெற்று சாதனை படைத்துள்ளது.

நீண்ட இடைவெளிக்கு பிறகு எதிர்நீச்சல் தொடரில் ஆதி குணசேகரன் ஆக வேல ராமமூர்த்தி வந்ததாலும் புதிய ஆதி குணசேகரன் எப்படி நடிக்கிறார் என்பதை பார்க்கவும் மக்களிடம் அதிக ஆர்வம் இருந்ததால் இந்த டிஆர்பி ரேட்டிங் அதிகமா உள்ளது என பலரின் கருத்தாக உள்ளது.

இரண்டாவது இடத்தில் கயல் சீரியல் 10.72 புள்ளிகளைப் பெற்று இரண்டாவது இடத்திலும், 10.12 புள்ளிகளை பெற்று சுந்தரி சீரியல் மூன்றாவது இடத்திலும், 10.07 புள்ளிகளை பெற்று வானத்தைப்போல சீரியல் நான்காவது இடத்திலும், 9.12 புள்ளிகளை பெற்று இனியா சீரியல் ஐந்தாவது இடத்திலும், 8.82 புள்ளிகளை பெற்று விஜய் டிவியில் ஒளிபரப்பப்பட்டு வரும் சிறகடிக்க ஆசை ஆறாவது இடத்திலும்.

8.21 புள்ளிகளை பெற்று விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் பாக்கியலட்சுமி சீரியல் ஏழாவது இடத்திலும், ஆனந்த ராகம் சீரியல் 7.15 புள்ளிகளை பெற்றுள்ளது இது எட்டாவது இடத்திலும், ஆகா கல்யாணம் சீரியல் 6.8 புள்ளிகளை பெற்று ஒன்பதாவது இடத்திலும், கார்த்திகை தீபம் சீரியல் 6.64 புள்ளிகளை பெற்று 10-வது இடத்திலும் இடம்பெற்றுள்ளது.