Ethirneechal serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருவதனால் டிஆர்பியில் முன்னனி வகித்து வருகிறது. எப்படியாவது அப்பத்தாவின் 40% சொத்தை ஆட்டையை போட்டு விட வேண்டும் என குணசேகரன் கங்கணம் கட்டிக்கொண்டு திரிந்து வந்தார். ஆனால் அதற்கு ஆப்பு வைக்கும் வகையில் ஜீவானந்தம் அப்பத்தாவின் மொத்த சொத்தையும் தனது பெயரில் எழுதி கொண்டார்.
எனவே இது குறித்து குணசேகரனுக்கு தெரியவர குடும்பமே அதிர்ச்சி அடைந்தது இப்படிப்பட்ட நிலையில் குணசேகரன், ஜனனி, சக்தி போன்றவர்களை நேரில் சந்தித்து ஜீவானந்தம் பேச இந்த நேரத்தில் குணசேகரன் உங்களால் ஒன்னும் புடுங்க முடியாது என்று வாய்க்கு வந்தபடி பேசியதால் குண்டு கட்டாக தூக்கி சென்று அடி நொறுக்கி விட்டனர். வீட்டிற்கு வந்தவுடன் உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் மருத்துவமனைக்கு செல்ல ஒரு பக்கம் கை, கால் வராமல் போய்விட்டது.
தற்பொழுது தான் அனைத்தும் சரியாகி வீட்டிற்கு வந்திருக்கிறார் இப்படிப்பட்ட நிலையில் ஜீவானந்தத்தை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக குணசேகரன் கதிருடன் சென்னைக்கு சென்று தேட மறுபுறம் சக்தி, ஜனனி இருவரும் தேடி வருகிறார்கள். எப்படியாவது அந்த ஜீவானந்தத்தை ஒரு வழி செய்து அவனுக்கு நான் யார் என்பது தெரிய வேண்டும் என குணசேகரன் கூறி வருகிறார்.
அப்படி தற்பொழுது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் ஏற்கனவே ஜீவானந்தத்திடம் சொத்துக்களை இழந்த நபரிடம் ஜனனி, சக்தி விசாரிக்கின்றனர். அப்பொழுது அவர்கள் இவர்கள் மேல் சந்தேகப்பட சக்தி நான் குணசேகரனின் தம்பி என்று சொல்ல இவங்க யார் என்று கேட்கின்றனர் அதற்கு சக்தி அமைதியாக இருக்க ஜனனி அவருடைய வைஃப் எனக் சொல்கிறார்.
சக்தியை இத்தனை நாட்களாக ஏற்றுக் கொள்ளாமல் இருந்து வந்த ஜனனி இதற்கு மேல் தனது கணவராக ஏற்றுக்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை அடுத்து குணசேகரன் ஜீவானந்தத்தை தீர்த்து கட்ட வேண்டும் என கதிரிடம் சொல்கிறார் அதற்கு கதிர் ஒருவேளை சொந்தக்காரனா இருப்பானோ எனக் கூற இதோடு ப்ரோமோ நிறைவடைகிறது.