ஜீவானந்தத்தின் காதலிதான் குணசேகரன் மனைவி ஈஸ்வரியா? எதிர்நீச்சல் சீரியல் இருக்கும் மிகப்பெரிய டுவிஸ்ட்

ethineechal
ethineechal

ஜீவானந்தம் இந்த தொடரில் யார் என தெரியாமல் இருந்து வந்த நிலையில் தற்போது இவர் குறித்த சில தகவல்கள் புரிய வந்துள்ளது. அதாவது, சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில் இந்த சீரியலை திருச்செல்வம் இயக்கி வருகிறார்.

இவர் தான் ஜீவானந்தம் கேரக்டரில் அறிமுகமாகி இருக்கும் நிலையில் இவர் யார் என்று தெரியாமல் இருந்து வருகிறது. இவ்வாறு பல புதிர்களுடன் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல் டிஆர்பியில் முதலிடத்தில் இருந்த வருகிறது.தொடர்ந்து விறுவிறுப்பான கதை அம்சத்துடன் ஓடிக் கொண்டிருக்கும் நிலையில் பல்வேறு டுவிஸ்ட்கள் இருந்து வருகிறது.

அந்த வகையில் தற்பொழுது குணசேகரன் கண்ணில் மண்ணை தூவி விட்டு அப்பத்தாவை 40% சொத்தை ஜீவானந்தம் ஆட்டையை போட்டுள்ளார். மேலும் இதனால் கடுப்பான குணசேகரன் உங்களால் ஒன்னும் புடுங்க முடியாது என சொல்ல இதனால் கடுப்பான ஜீவானந்தத்தின் ஆட்கள் குண்டு கட்டாக குணசேகர்னை தூக்கி செல்கின்றனர்.

இவ்வாறு கெத்தாக இருந்த குணசேகரனை இந்த நிலைமையில் பார்ப்பதற்கு வருத்தமாக தான் இருக்கிறது. என்ன இருந்தாலும் இப்படி அசிங்கப்படுத்துவது ஒன்றும் சரியில்லை. இந்நிலையில் ஜீவானந்தத்தின் ஆள் தான் கௌதம் என ஜனனிக்கும் தெரிய வந்திருக்கும் நிலையில் இது அதிர்ச்சியாக உள்ளது.

இவ்வாறு தற்போது வெளியாக இருக்கும் சுவாரஸ்யமான தகவல் என்னவென்றால் குணசேகரன் மனைவியான ஈஸ்வரி கல்லூரியில் படிக்கும் பொழுது ஒருவரை காதலிப்பார். அந்த நபர் ஒரு சமூகப் போராளியும் கூட இவர்களது திருமணத்திற்கு ஈஸ்வரியின் தந்தை சம்மதிக்காததால் வேறு வழியின்றி குணசேகரனை திருமணம் செய்து கொள்கிறார்.

அப்படி தற்பொழுது என்ட்ரி கொடுத்திருக்கும் ஜீவானந்தம் தான் ஈஸ்வரியின் காதலனாக இருக்குமோ என்று கேள்வி எழுந்திருக்கிறது. ஏனெனில் அவரின் தோற்றம் அந்த காதலனின் தோற்றத்தோடு ஒப்பிட்டு பார்க்கும் பொழுதும், அவர் ஒரு சமூக போராளி என்பதனால் ஜீவானந்தம் தான் ஈஸ்வரியின் காதலர் என கூறப்படுகிறது. இவ்வாறு ஜீவானந்தம் ஈஸ்வரி பார்த்துக்கொள்ளும் பொழுது மிகப்பெரிய டுவிஸ்ட் இருக்கிறது.