காதல் ஜோடிகளாக ஜீவானந்தம், ஈஸ்வரியின் புகைப்படம்.! இப்ப கதறி அழுது என்ன பிரயோஜனம்..

ethirneechal
ethirneechal

Ethirneechal serial: மிகவும் விறுவிறுப்பாக பல திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வரும் முக்கியமான சீரியல் தான் சன் டிவியின் எதிர்நீச்சல். இந்த சீரியல் டிஆர்பியில் முன்னணி வகித்து வரும் நிலையில் அப்பத்தாவின் 40% சொத்தை ஜீவானந்தத்திடம் இருந்து பறிக்க வேண்டும் என்பதற்காக குணசேகரன் போல முயற்சிகளை செய்து வருகிறார்.

இவ்வாறு குணசேகரனின் முட்டாள்தனமான சில விஷயங்களை கரிகாலன் கலாய்த்து வர இவருடைய கேரக்டருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. இவர் இந்த சொத்துக்களை மீட்டெடுக்க வேண்டும் என்பதற்காக மருமகள்களும் முயற்சியில் இறங்கியுள்ளனர் இதனை அடுத்து ரேணுகா பள்ளியில் நடன ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார்.

யார் இந்த ஜீவானந்தம் என பல மாதங்களாக குழப்பத்தில் ரசிகர்கள் இருந்து வந்தனர். அதற்கு தற்பொழுது தான் விடை கிடைத்துள்ளது அதாவது ஜீவானந்தம் ஈஸ்வரியின் முன்னாள் காதலராக இருப்பாரோ என சந்தேகம் ஏற்பட்ட நிலையில் தற்போது அது உண்மைதான் என அனைத்து கேள்விகளுக்கும் ஜீவானந்தமே பதில் கூறியுள்ளார்.

அதாவது ஜீவானந்தம் ஈஸ்வரியிடம் போனில் பேசி நிலையில் அப்பொழுது சந்தேகம் எழுந்தது. தற்பொழுது ஈஸ்வரியை பார்ப்பதற்காக ஜீவானந்தம் நேரில் வந்த நிலையில் இந்த பிரச்சனைகள் எல்லாத்திற்கும் நீங்கள்தான் காரணம் என மிகவும் கோபப்படுகிறார் பிறகு ஜீவானந்தம் நான் யார் என்பது குறித்த உண்மையை உடைக்கிறார்.

அதாவது ஈஸ்வரி நினைத்துப் பார்க்க ஈஸ்வரியை காதலிக்கும் ஜீவானந்தம் நேரடியாக அவருடைய அப்பாவை சந்தித்து பெண் கேட்கிறார். ஆனால் ஈஸ்வரியின் அப்பா அதை மறுத்து விட ஆதி குணசேகரனுக்கு உடனடியாக திருமணத்தை நடத்தி வைக்கிறார். இவ்வாறு ஈஸ்வரி இதனை எல்லாம் நினைத்துப் பார்க்க கோபப்படாமல் மிகவும் வருத்தத்துடன் இருக்கிறார்.

மேலும் ஜீவானந்தத்தை தனது கல்லூரி காலத்தில் பார்க்கும் பொழுது எவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தார் என்னவெல்லாம் நடந்தது என்பதை ஞாபகப்படுத்தி பார்க்க இளம் வயது ஈஸ்வரி மற்றும் ஜீவானந்தம் குறித்த சில காட்சிகள் வெளியாகி இருக்கிறது. அது குறித்த புகைப்படங்கள் இதோ.

ethirneecha
ethirneecha