புதிய பிரச்சினையில் மாட்டிக் கொள்ள போகும் கதிர்.. சொத்து விஷயத்தில் மருமகளுக்கு அதிர்ச்சி கொடுத்த அப்பத்தா.. அப்பனா 40% சொத்து யாருக்கு?

ethirneechal
ethirneechal

Ethirneechal serial: சன் டிவி ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில் அப்பத்தாவிடம் இருந்து எப்படியாவது 40% சொத்தை பெற வேண்டும் என்பதற்காக குணசேகரன், கதிர் போராடி வருகிறார்கள். அப்படி தற்பொழுது அப்பத்தாவை தீர்ந்து காட்ட முடிவு செய்திருக்கும் நிலையில் மறுபுறம் ஜீவானந்தம் தனது மனைவியின் இறப்பிற்கு காரணமானவர்களை சும்மா விடக்கூடாது என்றும் வெண்பாவிற்காக அமைதியாக இருப்பதாகவும் தன்னுடன் வேலை செய்பவர்களிடம் கூறி வருகிறார்.

அதாவது அப்பத்தாவிடம் குணசேகரன் 40% கேட்க ஆனால் அப்பத்தா தர முடியாது என மறுத்ததால் வீட்டிற்கு திருமணம் செய்து வந்த பெண்களிடம் கிழவியின் மனதை மாற்ற வேண்டும் என கூறுகிறார். ஆனால் ஈஸ்வரி, ஜனனி இருவரும் ஜீவானந்தத்தை சந்தித்து அப்பத்தாவிற்கு கூடுதல் பாதுகாப்பு தரும்படி கேட்டுவிட்டு வருகின்றனர்.

மேலும் ஜீவானந்தம் தான் ஈஸ்வரியை முதலில் திருமணம் செய்து கொள்ள இருந்த நபர் என்பது குணசேகரனுக்கு தெரிய வர இதனால் ஈஸ்வரி டைவர்ஸ் செய்ய வேண்டும் என்பதற்காக ஆடிட்டர்களை வீட்டிற்கு வரவழைத்திருந்தார். இது குறித்து பேசிக் கொண்டிருக்கும் பொழுது அப்பத்தா என்ட்ரி கொடுத்து அதுக்கு முன்னாடி நிறைய வேலை இருக்குப்பா என கூறுகிறார்.

பிறகு குணசேகரனிடம் சக்தி-ஜனனி இருவரும் இனிமே என்னுடன் இந்த வீட்டில் தான் இருப்பாங்க என்று கூற அதற்கு அப்ப நாங்க மொத்தமா வெளியில போறோம் என்று குணசேகரன் சொல்கிறார் அதற்கு அப்பத்தா உங்களுடைய விருப்பம் என்று சொல்லி அவமானப்படுத்துகிறார்.

ஆடிட்டர் உடன் குணசேகரன், கதிர் தனியாக பேசிக் கொண்டிருக்க அவர்கள் ஏதாவது செய்தால் தான் நம்ப ஒரு முடிவெடுக்க முடியும் என்று கூற அதற்கு குணசேகரன் கிழவிய போட்டு விடலாமா என கேட்கிறார். இதனை அடுத்து தற்போது வெளியாக இருக்கும் ப்ரோமோவில் கிழவிய நானே கொன்னுடுறேன் என்று கதிர் கூற அதற்கு கல்யாணம் பண்ணிக்கிற மாதிரி சொல்ற கிழவிய கொல்லனும் பா என்று குணசேகரன் சொல்கிறார்.

பிறகு அப்பத்தா ஜனனி, சக்தி, ஈஸ்வரி என வீட்டில் இருக்கும் அனைத்து பெண்களும் ஒன்றாக அமர்ந்து பேசிக் கொண்டிருக்க அப்பொழுது பேத்தி 40% ஷேர இவங்களுக்கு தான் வச்சிருக்கீங்கன்னு தெரியும் அப்பத்தா என்று சொல்ல என்னுடைய ஷேர் இவங்களுக்கு தானு யாரு சொன்னா என கேட்க உடனே மருமகள்களின் முகம் மாறுகிறது. இவ்வாறு அப்பத்தா யாருக்கு தான் அந்த 40% சொத்தை தர போகிறார் என்பது புரியாத புதிராகவே இருந்து வருகிறது.