Ethirneechal serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரன் அப்பத்தாவின் சொத்தை கைப்பற்றுவதற்காக பல முயற்சிகளை செய்து வந்தாலும் எதுவும் கை கொடுக்கவில்லை. எனவே இதற்காக வேறு வழியில்லாமல் அப்பத்தாவை போட்டுத் தள்ள முடிவு செய்துள்ளார்.
அதாவது அப்பத்தாவின் சொத்து ஜீவானந்தத்தின் பெயரில் எழுதப்பட்ட நிலையில் இதனை கைப்பற்றுவதற்காக குணசேகரன் பல முயற்சிகளை செய்து வந்தார். இந்த நேரத்தில் கோமாவில் இருந்த அப்பத்தா சுய நினைவுக்கு வந்ததை அடுத்து அப்பத்தாவிடம் சொத்தை எழுதி தருமாறு கேட்டார்.
ஆனால் அப்பத்தா முடியாது என்று திட்டவட்டமாக கூறியதால் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக போலீசர்களிடம் கூறி தனக்கு பாதுகாப்பை ஏற்படுத்திக் கொண்டார். இதனை அடுத்து ஜீவானந்தம் தான் ஈஸ்வரியை திருமணம் செய்து கொள்ள இருந்த நபர் என்பது குணசேகரனுக்கு தெரியவர ஈஸ்வரிவை டைவர்ஸ் செய்ய முடிவெடுத்துள்ளார்.
இந்த நேரத்தில் என்ட்ரி கொடுத்த அப்பத்தா அப்படியெல்லாம் கொடுத்து விட முடியாது அதுக்கு முன்னாடி நிறைய வேலை இருக்கு பா, இனிமேல் சக்தி-ஜனனி இந்த வீட்டில் என்னுடன் தான் இருப்பார்கள் என்று கூற இதற்கு குணசேகரன் அப்பனா நாங்க எல்லாம் மொத்தமா கிளம்புறோம் என்று கூற அதற்கு அப்பத்தான் அது உன்னுடைய இஷ்டம் பா என்று சொல்லி அதிர்ச்சி கொடுக்கிறார்.
இவ்வாறு பேசிக் கொண்டிருக்க தற்பொழுது வெளியாக இருக்கும் ப்ரோமோவில் குணசேகரன் ஞானத்தை அழைக்க இருங்க என சொல்கிறார். அதுதான் தெளிவா சொல்லிட்டாங்க பேசுற காலம் போயி கேட்கிற காலம் வந்துடுச்சுன்னு யாருக்கு எந்த காலம் வருகிறது என்று பார்க்கலாம் என கூறிவிட்டு ஆடிட்டர்களுடன் செல்கின்றனர்.
கதிர், குணசேகரன் ஆடிட்டரிடம் பேசிக்கொண்டிருக்க அவங்க அடுத்த அடி என்ன செய்றாங்கன்னு தெரியாம நாம எதுவும் செய்ய முடியாது என ஆடிட்டர் சொல்ல அதற்கு குணசேகரன் அந்த கிழவிய போட்டு விடலாமா என கேட்க கதிர் அதிர்ச்சடைகிறார்.