ரேணுகா முடியை பிடித்து தரதரவென இழுத்து வரும் ஞானம்.! அடுத்து டார்கெட் பட்டு தான் விசாலாட்சி இடம் கூறும் கதிர்..

ethirneechal
ethirneechal

Ethirneechal Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.  இந்த சூழலில் குணசேகரன் கேரக்டரில் நடித்து வந்த மாரிமுத்து மரணம் அடைந்ததால் எதிர்நீச்சல் சீரியலின் கதையை வெறுமாறு மாற்றி வருகின்றனர்.

குணசேகரன் கேரக்டருக்கு வேறு நடிகர் யாராவது நடிப்பார்களா என எதிர்பார்க்கப்பட்ட அந்த நிலையில் அதற்கு யாரும் செட் ஆகாத காரணத்தினால் கதையை மாற்றி உள்ளனர். அப்படி ஞானம், கதிர் அனைவரும் குணசேகரனை வலை போட்டு தேடி வருகிறார்கள்.

குணசேகரன் இவ்வாறு வீட்டை விட்டு போய் விட்டானே என விசாலாட்சி, கரிகாலன் அனைவரும் கஷ்டப்பட்டு வருகிறார்கள். ஈஸ்வரி செய்தது பிடிக்காத காரணத்தினால் தான் குணசேகரன் போய்விட்டதாக வீட்டில் இருப்பவர்கள் கூறி வருகிறார்கள். எனவே ஜீவானந்தம் ஈஸ்வரிக்கு போன் செய்து குணசேகரன் இருக்கும் இடத்தை கண்டுபிடித்து விட்டதாக கூறுகிறார்.

அவர் எங்கே இருக்கிறார் மறுபடியும் வந்துவிடுவாரா வீட்டில் இருப்பவர்கள் அனைவரும் என்னால்தான் அவர் வீட்டை விட்டு போய்விட்டதாக கூறி வருகின்றனர் என்ற சொல்கிறார். இவ்வாறு போய்க் கொண்டிருக்கும் நிலையில் தற்பொழுது வெளியாகியிருக்கும் ப்ரோமோவில்  விசாலாட்சி அவன பாக்காமலேயே கண்ணை மூடிடுவேனு பயமா இருக்குடா என்று கூறுகிறார்.

இதற்கு கதிர் பெரிய தல நீயெல்லாம் கிடையாது அந்த பட்டு தான் மண்டைய போட போகுது  என்று கூறி சமாதானப்படுத்துகிறார்.  இதனை அடுத்து ஞானம் ரேணுகாவின் முடியை பிடித்து வெளியே போடி என்று தரதரவென இழுத்து வருகிறார். இதனை எல்லாம் பார்த்து விட்டு கதிர் கையைத் தட்டிக் கொண்டிருக்க சத்தியமா நீ இதுக்குலாம் அனுபவிப்படா என்று கத்தி அழுது கொண்டே ரேணுகா சொல்கிறார்.

மேலும் ஜான்சி கரிகாலனிடம் அண்ண மட்டும் வீட்டுக்கு வந்து மறு தாலிய கட்ட வைக்கட்டும் என சொல்ல அவதான் நம்ப வழிக்க வர மாட்டேங்குறாளே என்று கரிகாலன்  கேட்க அதற்கு ஜான்சி ராணி பாத்துக்கும் பாத்துக்கும் டா என்று கூறுகிறார். இதனை எல்லாம் கிச்சனில் இருந்து கொண்டு நந்தினி, ஈஸ்வரி, ஜனனி கேட்டுக் கொண்டிருக்கின்றனர்.