Ethirneechal serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துவரும் நிலையில் தொடர்ந்து பல திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வருகிறது. இப்படிப்பட்ட நிலையில் இந்த எதிர்நீச்சல் சீரியலில் ஆதி குணசேகரன் கேரக்டரில் நடித்து வந்த மாரிமுத்து சில நாட்களுக்கு முன்பு மாரடைப்பு காரணமாக மரணமடைந்தார்.
இவ்வாறு இதனை அடுத்து குணசேகரன் கேரக்டரில் இதற்கு மேல் எந்த பிரபலம் நடிக்க போகிறார் என்பது கேள்விக்குறியாக இருந்து வருகிறது. ஆனால் தற்பொழுது வரையிலும் மாரிமுத்து நடித்த எபிசோடுகள் ஒளிபரப்பாகி வரும் நிலையில் விரைவில் புதிய குணசேகரன் அறிமுகமாக இருக்கிறார்.
தற்பொழுது எதிர்நீச்சல் சீரியலில் ஜனனி-சக்தி இருவரும் புதிய கம்பெனி ஆரம்பிப்பது குறித்து குடும்பத்தினர்களிடம் கூறிய நிலையில் இதனால் குணசேகரன் ஞானம், கதிர் என அனைவரும் கடும் கோபத்தில் இருந்து வருகிறார்கள். இந்த நேரத்தில் விசாலாட்சியும் தனது நகைகளை சக்திக்கு கொடுத்து உதவி உள்ளார்.
எனவே நல்ல நாள் பார்த்து விரைவில் புதிய கம்பெனி ஆரம்பிப்பதற்கான பணியில் ஜெனனி-சக்தி ஈடுபட இருக்கின்றனர். இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் தனியாக வெளியில் நின்று பேசிக் கொண்டிருக்கும்போது ஜனனி சக்தியின் கையை பிடித்து எனக்கு சக்தி கூட தான் வாழனும்னு இருக்கு உனக்கு சக்தி என்று கேட்கிறார்.
இதற்கு நீ மட்டும் தான் என் வாழ்க்கை எனக் கூறி உடனே சக்தி ஜனனியை கட்டிப்பிடித்து அன்பை வெளிப்படுத்துகிறார். பிறகு உணவுகளை சமைத்து ரெடியாக எடுத்து வைத்துக் கொண்டு கிளம்ப இந்த நேரத்தில் நந்தினி முதல் நாள் நல்லபடியா போகட்டும் அப்புறம் பக்குவமா பார்த்து சொல்லிக்கொள்ளலாம் என்று பேசிக் கொண்டிருக்கும் பொழுதே கரிகாலன் வந்து சின்னக்கா தம்பிக்கு தெரியாம ஏதாச்சும் திருட்டுத்தனம் பண்றீங்களா என்று கூறிவிட்டு பாத்திரங்களை திறந்து பார்க்க முயற்சிக்க ஈஸ்வரி தடுக்கிறார் அனைவரும் அதிர்ச்சடைகின்றனர்.