ஜீவானந்தத்தின் காதலிதான் ஈஸ்வரி என்ற உண்மையை தெரிந்துக் கொண்ட குணசேகரன்.. போட்டு உடைத்த அப்பா

ethirneechal 1
ethirneechal 1

Ethirneechal serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துவரும் நிலையில் தொடர்ந்து பல திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வருகிறது. தற்பொழுது ஈஸ்வரியை காதலித்த பையன் தான் ஜீவானந்தம் என்பது குணசேகரனுக்கு தெரிந்திருக்கும் நிலையில் அடுத்து என்ன நடக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.

அதாவது, அப்பத்தாவின் 40% சொத்தை ஜீவானந்தம் தன்னுடைய பெயரில் எழுதிக் கொண்ட நிலையில் எப்படியாவது அதனை குணசேகரன் பெற வேண்டும் என்பதற்காக பல முயற்சிகளை செய்து வந்தார். அப்படி ஒரு கட்டத்தில் ஜீவானந்தத்தை தீர்த்து கட்ட அடியாட்களை அனுப்பி வைத்த நிலையில் அங்கு ஜீவானந்தத்தை சுடுவதற்கு பதிலாக அவருடைய மனைவியை சுட்டு விடுகின்றனர்.

இதனால் ஜீவானந்தத்தின் மனைவி உயிரிழந்த விட இது ஈஸ்வரி, ஜனனி அனைவருக்கும் வருத்தத்தை தந்துள்ளது. குணசேகரன் அப்பதாவிடம் சொத்தை தனது பெயரில் எழுதி வைக்குமாறு கேட்க ஆனால் இதற்கு அப்பத்தா வாயை திறக்கவில்லை எனவே அந்த கிழவியை இதற்கு சம்மதிக்க வைக்க வேண்டும் என வீட்டு மருமகளிடம் கூறி அனுப்பி வைத்துள்ளார்.

இந்நிலையில் ஜனனி, ஈஸ்வரி ஜீவானந்தம் வீட்டிற்கு சென்ற நிலையில் அங்கு அவருடைய மகள் ஈஸ்வரி இடம் உங்களைப் பார்ப்பதற்கு என்னுடைய அம்மாவை பார்ப்பது போலவே இருக்கிறது எனக் கூற இதனை கேட்ட ஜீவானந்தம் அதிர்ச்சி அடைகிறார். இவ்வாறு தற்பொழுது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் ஈஸ்வரியின் அப்பா வீட்டிற்கு வந்து அனைத்து உண்மைகளையும் குணசேகரனிடம் போட்டு உடைக்க இதனை கேட்ட விசாலாட்சி எங்க வந்து எத பேசணும்னு தெரியாதா உங்களுக்கு என கேட்கிறார்.

இதையெல்லாம் கேட்டு விட்டு ரேணுகா, நந்தினி பதட்டப்படுகின்றனர். இதனை ரேணுகா ஈஸ்வரியிடம் போன் பண்ணி அவருடைய அப்பா சொன்ன ஈஸ்வரியை எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு கல்யாணம் பண்ணி வைங்க என்று கேட்டான் அந்தப் பையன் தான் ஜீவானந்தம் என்று சொன்ன அனைத்தையும் கூற ஈஸ்வரி அதிர்ச்சி அடைகிறார். குணசேகரன் இதனை எல்லாம் கேட்டுவிட்டு வெளியில் வந்து ஒரு ஓரமாக அமர்ந்து யோசிக்கிறார்.