Sun tv ethirneechal serial today promo: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில் தொடர்ந்து ஏராளமான திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வருகிறது. ஆதி குணசேகரன் கேரக்டரில் வேல ராமமூர்த்தி என்ட்ரி கொடுத்திருக்கும் நிலையில் பல திருப்பங்களுடன் வெளியாகி உள்ளது.
அதாவது குணசேகரன் வீட்டை விட்டு சென்ற பிறகு மருமகள்கள் அனைவரும் திமிராக இருந்து வந்த நிலையில் கதிர் ஞானத்தை போலீசார்ளிடம் மாட்டி விட்டனர். அதாவது கதிர் அண்ணனுடைய செருப்பு கிடைத்து விட்டதாகவும் விரைவில் வீட்டிற்கு வந்து விட்டதாகவும் குடும்பத்தினர்களிடம் கூறினார். ஆனால் குணசேகரன் வராத காரணத்தினால் சக்தி, ஜனனி இருவரும் போலீசர்களிடம் சொத்துக்கு ஆசைப்பட்டு குணசேகரனை கொன்று விட்டதாக கதிர், ஞானத்தின் மேல் கேஸ் கொடுத்தனர்.
அண்ணன் தம்பி மூன்று பேரையும் அலேக்கா தூக்கி சென்ற போலீஸ்.! எதிர்நீச்சல் பரபரப்பான ப்ரோமோ
அதன்படி போலீசார்களும் இவர்களை தனியாக அழைத்துச் சென்று விசாரணை நடத்திய நிலையில் கதிர் திமிராகப் பேசியதால் அடிக்க ஆரம்பிக்கிறார்கள். உடனே குணசேகரன் காரில் இருந்து இறங்கி தனது தம்பிகளை அழைத்து செல்கிறார். வீட்டிற்கு வந்தவுடன் வழக்கம் போல மருமகளிடம் வம்பு வளர்த்த எதற்கு கதிரை கைநீட்டி அடிச்ச என்று ஈஸ்வரியிடம் கேட்க என்னுடைய தன்மானத்தை காப்பாத்திக்க தான் அடிச்ச என்று கூற உடனே குணசேகரன் ஈஸ்வரியை பளார் என்று அறைந்து விடுகிறார்.
இதனைப் பார்த்து வீட்டில் இருக்கும் மருமகள்கள் அதிர்ச்சி அடைய தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் மருமகளிடம் விசாலாட்சி முன்னாடி மாதிரி அவங்கிட்ட நக்கல், நையாண்டி பண்றதெல்லாம் வச்சுக்காதீங்க சிங்கம் மாதிரி வந்து இருக்கான் பாத்தீங்களா ஈஸ்வரி வாங்கினத்த என்று கூற இந்த நேரத்தில் போலீசார்கள் படையோடு வரும் வருகின்றனர்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பவா செல்லதுரையின் குடும்ப புகைப்படங்களை பார்த்துள்ளீர்களா?
அப்பொழுது கதிர் வாங்குனது பத்தலையா என்று கேட்க அதற்கு போலீஸ் வாங்கினதை இரண்டு மடங்கா கொடுக்க தான் வந்திருக்குகோம் என்று சொல்ல குணசேகரன் ஏய் என்று கத்துகிறார். போலீஸ் போனா போகுதுன்னு விட்டுட்டு போலாம்னு தான் பார்த்தேன் அண்ணனும் தம்பிகளும் சேர்ந்து ஏகுறீங்க விடமாட்ட உங்கள என்று கூறிவிட்டு குணசேகரன், கதிர், ஞானம் அனைவரையும் அழைத்துச் செல்கின்றனர் இதோடு ப்ரோமோ நிறைவடைகிறது.