கட்டின பொண்டாட்டி என்று கூட பார்க்காமல் வெளுத்து வாங்கும் குணசேகரன்.. ஆனாலும் மாரிமுத்து போல வரலையே பாஸ்

ethirneechal
ethirneechal

Ethirneechal Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் ஆதி குணசேகரன் கேரக்டரில் வேல ராமமூர்த்தி என்ட்ரி கொடுத்திருக்கும் நிலையில் எதிர்பாராத எபிசோடுகளுடன் ஒளிபரப்பாகி வருகிறது. அதாவது குணசேகரன் யாரிடமும் சொல்லாமல் கடிதம் எழுதி வைத்துவிட்டு வீட்டை விட்டு கிளம்பினார்.

இவ்வாறு குணசேகரன் வீட்டை விட்டு போனதற்கு காரணம் வீட்டில் இருக்கும் மருமகள் தான் என விசாலாட்சி கடும் கோபத்தில் இருந்து வந்த நிலையில் ஒரு கட்டத்தில் கதிர், ஞானம் குணசேகரனை தேடி அலைந்தனர். அந்த நேரத்தில் அண்ணன் மீண்டும் வீட்டிற்கு வந்து விடுவார் என கூறுகிறார்கள்.

ஆனால் இவர்கள் கூறி சில நாட்கள் கடந்தும் குணசேகரன் வீட்டிற்கு வராத காரணத்தினால் பணத்திற்கு ஆசைப்பட்டு கதிர் குணசேகரனை கொன்று விட்டதாக கூறி சக்தி, ஜனனி போலீசர்களிடம் புகார் அளிக்க உடனே போலீசார்கள் சக்தி, ஞானத்தை கைது செய்கின்றனர்.

இவ்வாறு சக்தி, ஞானம் ஓவராக பேசியதால் தனியாக அழைத்து சென்று போலீஸார்கள் அடித்து நொறுக்க இந்த நேரத்தில் குணசேகரன் கேரக்டரில் வேல ராமமூர்த்தி என்ட்ரி கொடுக்கிறார். போலீசார்கள் இவ்வாறு தனது தம்பியை அடித்து விட்டார்கள் என மிகவும் வேதனை அடைகிறார்.

அதன் பிறகு வேல ராமமூர்த்தி வீட்டிற்கு வர மருமகள்கள் அனைவரும் ஆரத்தி எடுக்கின்றனர் இதனால் விசாலாட்சி மிகவும் மகிழ்ச்சி அடைகிறார். இவ்வாறு குணசேகரன் வந்திருப்பதை தெரிந்துக் கொண்ட அப்பத்தாவும் வர அனைவரும் பதற்றத்துடன் இருக்கின்றனர்.

ethirneechal
ethirneechal

அப்படி தற்பொழுது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் பொன்னிதாயி வா இங்க வெளில போயி சோத்து வியாபாரம் பண்ற குணசேகரன் வீட்ல இருந்துகிட்டு என்று கேட்க அப்பனா வெளியில போயி செய்யலாமா என நந்தினி சொல்ல ஏய் என்று கத்துகிறார் குணசேகரன்.

பிறகு ஈஸ்வரியிடம் ஒரு ஆம்பளைய எப்படி கைநீட்டி அடிச்ச என்று கேட்க என் சுயமரியாதையை காப்பாற்றுவதற்காக அடிச்சாங்க என்று சொல்ல உடனே குணசேகரன் ஈஸ்வரியை பளார் என அறைந்து விடுகிறார். இதனை கதிர் கைதட்டி மகிழ்ச்சி அடைய அப்பத்தா குணசேகரா என்று கத்துகிறார். பிறகு அப்பத்தா மருமகளை தனியாக அழைத்து சென்று அவன் எதையும் லேசாக விடமாட்டான் என்று கூற மருமகள் ஆளுக்கு ஒரு புறம் வருத்தத்துடன் அமர்ந்துள்ளனர்.