வர்றவன் குணசேகரன் இல்லம்மா ஒத்த பானை சுடலை உக்கிரமா வந்துகிட்டு இருக்கான்.! எதிர்நீச்சல் இன்றைய ப்ரோமோ

ethirneechal
ethirneechal

Ethirneechal Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் வேல வராம மூர்த்தி என்ட்ரி கொடுத்திருக்கும் நிலையில் இதற்கான எபிசோடுகள் மற்றும் ப்ரோமோக்கள் வெளியாகி இணையதளத்தை கலக்கி வருகிறது. மேலும் அண்ணன் தம்பிகளின் பாசம் கண்கலங்க வைக்கும் அளவிற்கு இருப்பதனால் மீண்டும் சீரியல் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.

ஆதி குணசேகரன் கேரக்டரில் நடித்து வந்த மாரிமுத்து இறப்பிற்கு பிறகு யார் குணசேகரன் கேரக்டரில் நடிக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் இருந்து வந்தது எனவே இதற்கு பதில் அளித்த எதிர்நீச்சல் சீரியல் இயக்குனர் திருசெல்வம் ஆதி குணசேகரன் கேரக்டரை மாரிமுத்து சாரை தவிர வேறு யாராலும் பூர்த்தி செய்ய முடியாது எனவே ஆதி குணசேகரன் கேரக்டரில் யாரும் நடிக்க மாட்டார்கள் என கூறினார்.

இவ்வாறு சில வாரங்களாக கதிர், ஞானம் அண்ணனை பார்த்து விட்டதாகவும் விரைவில் வீட்டிற்கு வருவார் எனவும் கூறினார்கள். இவ்வாறு இவர்கள் சொல்லி சில நாட்களாகியும் குணசேகரன் வராத காரணத்தினால் சக்தி, ஜனனி இருவரும் போலீசிடம் சிக்க வைக்கின்றனர்.

அப்படி போலீஸார்கள் ஞானம், சக்தியை கைது செய்து தனியாக அழைத்துச் சென்று அடி நொறுக்கி எடுக்கின்றனர். இந்த நேரத்தில் சரியாக வேல ராமமூர்த்தி என்ட்ரி கொடுக்க அனைவரும் அதிர்ச்சி அடைகிறார்கள். இவ்வாறு தம்பிகளை இப்படி போலீசார் அடித்து விட்டார்களே என மிகவும் வேதனைப்படுகிறார்.

இதனை அடுத்து தற்பொழுது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் வர போறவன் குணசேகரன் இல்லமா முத்துப்பான சுடலை உக்கிரமா வந்துகிட்டு இருக்காமா எனக் கூற மருமகள்கள் திருதிருவென முழிக்கின்றனர். பிறகு வேல ராமமூர்த்தி வீட்டிற்கு வர அனைத்து மருமகள்களும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் விசாலாட்சி ஈஸ்வரி, ரேணுகா, நந்தினி வாங்கடி என கூப்பிட ஆலத்தை எடுத்து வீட்டிற்கு அழைக்கின்றனர்.

இந்த நேரத்தில் ஈஸ்வரியின் அப்பனா நாங்க கிளம்புறோம் என்று கூறுவதற்கு வேல ராமமூர்த்தி பொண்ணு கொடுத்து இந்த வீட்டுக்கு நல்லா பெருமை சேர்த்து வச்சிருக்கீங்க நல்லா உட்கார்ந்து சாப்பிட்டு போங்க என கூற இந்த நேரத்தில் அப்பத்தாவும் வருகிறார்.