கதிரை அடித்து துவைக்கும் போலீஸ் கடைசி நிமிஷத்தில் வந்து காப்பாற்றிய ஆதி குணசேகரன்.! எதிர்நீச்சல் பரபரப்பான ப்ரோமோ

ethirneechal
ethirneechal

Ethirneechal Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில் தொடர்ந்து பல திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வருகிறது தற்போது ஆதி குணசேகரன் கேரக்டருக்கு வேல ராமமூர்த்தி என்ட்ரி கொடுத்துள்ளார்.

ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்து வந்த ஆதி குணசேகரன் கேரக்டருக்கான ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது. ஆதி குணசேகரன் கேரக்டரில் நடித்து வந்த மாரிமுத்து மரணமடைந்ததை தொடர்ந்து யார் இவருக்கு பதிலாக நடிக்கப் போகிறார் என்று எதிர்பார்க்கப்பட்டு வந்தது.

வேல ராமமூர்த்தி நடிக்க ஆசை இருந்தாலும் தொடர்ந்து படங்களை நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதனால் சீரியலில் நடிக்க வாய்ப்பு மிகவும் குறைவென பேட்டியில் கூறியிருந்தார். இதனை அடுத்து எதிர்நீச்சல் சீரியலில் தொடர்ந்தே விறுவிறுப்பான காட்சிகள் ஒளிபரப்பாகி வந்தது.

வீட்டில் ஏராளமான சண்டைகளும் நிகழ்ந்து வந்த நிலையில் ஞானம், கதிர் அண்ணனைப் பார்த்து விட்டதாகவும் விரைவில் வீட்டிற்கு வந்து விடுவார் எனவும் கூறினார்கள். வீட்டில் இருப்பவர்களும் வந்துவிடுவார் என நினைத்து வந்த நிலையில் விசாலாட்சி மருமகளால் தான் இவ்வளவு பிரச்சனை என கோபத்தில் இருந்து வருகிறார்.

இவ்வாறு கதிர், ஞானம் குணசேகரன் வந்து விடுவதாக கூறி இவ்வளவு நாட்களாக வராத காரணத்தினால் ஜனனி, சக்தி போலீசார்களிடம் இவர்களை சிக்க வைத்து தனியாக அழைத்துச் சென்று விசாரிக்கின்றனர். போலீசர்களிடம் வர முடியாது எனக் கூறியும் கரிகாலன், ஞானம், சக்தியை போலீசார்கள் தரதரவென இழுத்து செல்கின்றனர்.

இவ்வாறு இதனையடுத்து தற்போது வெளியாகியிருக்கும் ப்ரோமோவில் போலீஸார்களுடன் இணைந்து ஜனனி, சக்தியும் சென்றிருக்கும் நிலையில் ஞானம் கதிரை தனியாக அழைத்துச் சென்றுள்ளனர். இந்த நேரத்தில் நந்தினியிடம் அவருடைய அப்பா ஜனனி போன் எடுத்துட்டு போயிருக்கால என்ன ஆச்சுன்னு விசாரி என சொல்ல நந்தினி அதெல்லாம் அவங்களே சொல்லுவாங்க என்று கூறுகிறார்.

பிறகு நந்தினி உங்க புள்ள வரணும் இதற்கு எல்லாத்துக்கும் ஒரு பதிலை சொல்லணும் என விசாலாட்சியிடம் கத்த விசாலாட்சி அறைய கை ஓங்குகிறார். உடனே அதனை நந்தினி தடுத்து நிறுத்தி முறைக்கிறார். இதனை அடுத்து போலீசார்கள் மரியாதை கெட்டுப் போயிடும் பாத்துக்கங்க என்று கூற மரியாதை கெட்டுப் போயிடுமா யாருகிட்ட பேசிக்கிட்டு இருக்கன்னு தெரியுமா என்று கதிர் கூற இந்த நேரத்திற்கு காரில் இருந்து ஒருவர் இறங்குகிறார். கதிர் திமிராக பேசியதனால் போலீஸார்கள் அடி வெளுத்து எடுக்க இந்த நேரத்தில் வேல ராமமூர்த்தி காரில் இருந்து இறங்கி சென்று கத்த அனைவரும் அதிர்ச்சடைகிறார்கள் இதோடு ப்ரோமோ நிறைவடைகிறது