Ethirneechal Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் ஆதி குணசேகரன் கேரக்டருக்கு ராமமூர்த்தி என்ட்ரிக் கொடுக்க இருக்கும் நிலையில் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்து வருகின்றனர். இதற்கு முன்பு சீரியலில் பல அதிரடியான காட்சிகள் ஒளிபரப்பாகி வருகிறது.
ஒட்டுமொத்த குடும்பமே மீண்டும் ஆதி குணசேகரன் வந்துவிடுவானா என்ற எதிர்பார்ப்புடன் காத்து வரும் நிலையில் மனைவிகளுக்கும் கணவர்களுக்கும் இடையே பெரும் போர் நடைபெறுகிறது. குணசேகரன் பார்த்து விட்டதாகவும் விரைவில் வந்து விடுவதாகவும் கதிரும், ஞானமும் கூறிவரும் நிலையில் இதுவரையிலும் குணசேகரன் வீட்டிற்கு வராத காரணத்தினால் சொத்துக்கு ஆசைப்பட்டு கதிர் குணசேகரனை கொல்ல வாய்ப்பு இருப்பதாக கூறுகிறார்
இதனால் ஒட்டுமொத்த குடும்பமும் அதிர்ச்சி அடைகிறது விசாலாட்சி என்ன இப்படி பேசுறா என அனைவரும் முன்பும் கேட்க இவ்வளவு பிரச்சனைகள் நடக்கும் பொழுதும் சக்தி அதனைப் பற்றி வாயை திறக்கவில்லை. ஆனால் குணசேகரன் காணாமல் போனதிலிருந்து விசாலாட்சி மருமகள்கள் மீது கடும் கோபத்தில் இருந்து வருகிறார்.
இவ்வாறு எவ்வளவு பிரச்சினைகள் நடைபெற்றாலும் தனக்கு கிடைக்கும் சோற்றுக்கு எந்த ஒரு பாதிப்பு வந்துறக் கூடாது என கரிகாலன் ஒருபுறம் நினைத்து வருகிறார். இந்த சூழலில் தற்பொழுது வெளியாக இருக்கும் ப்ரோமோவில் வீட்டிற்கு திடீரென வரும் போலீஸார்கள் ஞானம், கதிரை கைது செய்கிறார்கள். அப்பொழுது ஞானம் நாங்க என்ன தப்பு பண்ணுனோம் நாங்க எங்க வண்டில வருகிறோம் நீங்க போங்க என கூற போலீஸ் யோ வண்டில ஏத்தியா என்று கூறுகிறார்.
எனவே போலீசார் கரிகாலன், ஞானம், கதிர் மூன்று பேரையும் இழுத்து செல்கின்றனர். இதனால் கடுப்பான விசாலாட்சி சக்தியிடம் என்ன பண்ணி வச்சிருக்க என்று கேட்க அண்ணா வராங்கன்னு சொல்றாங்க ஆனா இன்னும் ஆள காணோம் ஏதாவது பண்ணிட்டாங்லானு தெரியல என்று கூற பிறகு விசாலாட்சி மருமகளை பார்த்து என் குடியை கெடுக்க வந்தவங்கள பார்த்து நான் எப்படி பேசுவாஎன்று கேட்க இதற்கு கோபப்பட்ட நந்தினி குடிய கெடுக்கிறதா யாரு குடிய யாரு கெடுக்கிறது எனக் கூற இதோட ப்ரோமோ நிறைவடைகிறது.