Ethirneechal serial today promo: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் தொடர்ந்து விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் ஜனனி தொடங்கிய தொழிலில் தற்பொழுது புதிய பிரச்சனை ஏற்பட்டிருக்கிறது. அதாவது ஜனனி, சக்தி இருவரும் சொந்தமாக பிசினஸ் செய்ய ஆரம்பித்துள்ளனர்.
சமீபத்தில் ஜனனியின் அப்பா ஜனனியை தோற்று விட்டதாக கூற அதற்கு ஜனனி சத்தியால் தான் நான் தோற்று விட்டேன் என்று சொல்றீங்க எனவே சக்தி உடனே நான் சேர்ந்து ஜெயித்து காமிக்கிறேன் என சபதம் எடுத்துள்ளார் எனவே இதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறார்.
உன் புள்ளையோட வாழ்க்கைய மட்டும் பாக்கிறியே பாக்கியா.. கணேசன் பாவம் இல்லையா – பாக்கியலட்சுமி
மறுபுறம் குணசேகரன் காணாமல் போய் இருப்பதனால் கதிர், ஞானம் இருவரும் தேடி வருகின்றனர். மேலும் குணசேகரன் கூறியது போலவே அப்பத்தாவை தீர்த்து கட்ட வேண்டும் எனவும் முடிவெடுத்துள்ளார்கள். அதோடு மட்டுமல்லாமல் ஜீவானந்தம் தானாக சிக்கி இருப்பதாகவும் அவனையும் போட்டுத் தள்ள வேண்டும் எனவும் வெறி உடன் இருந்து வருகின்றனர்.
விசாலாட்சி குணசேகரன் காணாமல் போனதிலிருந்து மருமகள்களுக்கு எதிராக இருந்து வருகிறார். அப்படி மருமகள் எது செய்தாலும் திட்டி தீர்ப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார். மேலும் ஜான்சி ராணி உடன் சேர்ந்து கொண்டு அனைத்து வேலைகளையும் பார்க்கிறார்.
அப்படி தற்பொழுது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் வீட்டில் இருக்கும் குட்டீஸ் அனைத்து மாடியில் நின்று கொண்டிருக்க நந்தினியின் மகள் ஆதிரை இடம் கரிகாலனையும் அவங்க அம்மாவையும் பார்த்தா எனக்கு பிடிக்கவே இல்லை என கூறுகிறார் இந்த நேரத்தில் வரும் ஜான்சி ராணி இதனை எல்லாம் காதில் வாங்கிக் கொள்கிறார்.
கண்ணீர் கடலில் மிதக்கும் பிக் பாஸ் வீடு.. கதறி அழும் கூல் சுரேஷ்.. புதிய டாஸ்க் உடன் இந்த வார ப்ரோமோ
இதனை அடுத்து ஜனனி ஒருவரிடம் என்ன நினைச்சுக்கிட்டு இருக்கீங்க உங்கள வான் பண்ணி விடுற அப்புறம் லீகலா ஆக்சன் எடுப்பேன் என்று கூற முடிஞ்சா எடு என அந்த நபர் சொல்கிறார். பிறகு ஜான்சி விசாலாட்சியை நீங்க வந்து ஒரு முடிவு சொல்லுங்க என கூற ரேணுகா, நந்தினி அத்த போகாதீங்கன்னு சொல்லிட்டேன் என்று கத்துகிறார்கள் ஆனாலும் விசாலாட்சியை ஜான்சிராணி ஆதிரையிடம் அழைத்து செல்கிறார்.