முக்கிய பொறுப்பை ஜனனி கையில் கொடுத்த அப்பத்தா.! ஜீவானந்தத்தை சந்தித்த ஈஸ்வரி.. எதிர்நீச்சல் ப்ரோமோ

ethirneechal
ethirneechal

Ethirneechal serial today promo 1: சன் டிவி ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியல் பல திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வரும் நிலையில் இப்பொழுது மீண்டும் குணசேகரன் காணாமல் போய் இருப்பது குடும்பத்தினர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது மேலும் கதிர், ஞானம் குணசேகரனை தேடி அலைந்து வருகிறார்கள்.

குணசேகரன் ஏற்கனவே அப்பத்தாவை போட்டுத் தள்ள வேண்டும் என முடிவெடுத்திருந்த நிலையில் அவர் சொன்னதை பிசுறு தட்டாமல் செய்ய வேண்டும் என கதிர் கூறுகிறார். அதேபோல் ஜீவானந்தத்தையும் பழிவாங்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார்.

இவ்வாறு போய்க்கொண்டிருக்க ஜனனியின் அப்பா திடீரென வந்து ஜனனிடம் நீ தோற்று விட்டதாக கூறுகிறார். அதற்கு ஜனனி எந்த சக்தியினால் நான் தோத்து விட்டேன் என்று சொல்றீங்களோ அதே சக்தி உடன் ஜெயித்து காமிக்கிறேன் என்று சவால் விட்டு உள்ளார்.

எப்படியாவது ஜனனி புதிய ஃபேக்டரி ஒன்றை ஆரம்பித்தது நல்லபடியாக பிசினஸ் செய்ய வேண்டும் என்பதற்காக முயற்சி செய்து வருகிறார். இவ்வாறு இது ஒருபுறம் போய்க்கொண்டிருக்க திடீரென ஈஸ்வரி ஜீவானந்தத்தை சந்தித்து பேசும் ப்ரோமோ இன்று வெளியாகி உள்ளது.

அதாவது தற்பொழுது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில், வீட்டில் இருப்பவர்கள் அனைவரும் ஒன்று கூடி நிற்க ஈஸ்வரி ஜீவானந்தத்தை பார்ப்பதற்காக சென்றுள்ளார். அங்கு வெண்பா அப்பா ஈஸ்வரி அம்மா வந்து இருக்காங்க என கூப்பிட ஜீவானந்தம் ஈஸ்வரியை பார்த்துவிட்டு என்ன திடீர்னு வந்து இருக்கீங்க என்று கேட்கிறார்.

இல்ல பேசணும்னு தோணுச்சு என்று சொல்லிவிட்டு இருவரும் பேச தொடங்க மறுபுறம் கதிர் ஞானத்திடம் ஜீவானந்தம் தானா வந்து சிக்கிருக்கான் அப்படியே அவன முடிச்சு விட்டுடனும் என்று சொல்ல ஈஸ்வரி இதனைக் கேட்டுக் கொண்டிருக்கிறார். பிறகு அப்பத்தா அனைவரிடமும் ஃபங்ஷனுக்கு ஏற்பாடு பண்ணி இருக்கேன் அதுல எல்லாரும் வந்து கலந்துக்கணும் இந்த ஃபங்ஷனுக்கு தலைமை தாங்க போறது யாரு தெரியுமா ஜனனி என்று சொல்ல கதிர் கைதட்டுகிறார்.