Ethirneechal serial today promo: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. ஆதி குணசேகரன் கேரக்டரில் நடித்து வந்த மாரிமுத்து மரணம் அடைந்ததால் தற்பொழுது ஆதி குணசேகரன் கேரக்டரில் வேல ராமமூர்த்தி என்ட்ரி கொடுத்துள்ளார். எனவே குணசேகரன் கேரக்டரில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது.
அப்படி காணாமல் போன குணசேகரன் மீண்டும் வீட்டிற்கு வர குடும்பத்தினர்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால் மருமகள்களை படாத பாடு படுத்தினார் எனவே மருமகள்களின் ஆட்டம் அவ்வளவுதான் என நினைத்துக் கொண்டிருக்கும் நேரத்தில் தற்பொழுது மீண்டும் குணசேகரன் காணாமல் போகி உள்ளார். குடும்பத்தினர்கள் அனைவரும் அமர்ந்து பேசிக்கொண்டிருக்கும் நேரத்தில் குணசேகரன் மீண்டும் கிளம்புவதாகவும் வேலை இருப்பதாக கூற இந்த நேரத்தில் போலீசர்கள் வந்து குணசேகரனை கைது செய்து அழைத்து செல்கிறார்கள்.
கதிர், ஞானம் குணசேகரனை தேடி அலைய அவர் போலீஸ் ஸ்டேஷனில் இல்லை எனவே தற்போது குணசேகரன் எங்கு போய் உள்ளார் என்பது யாருக்கும் தெரியாத காரணத்தினால் குழப்பத்தில் இருக்கின்றனர். இதனை அடுத்து ஜனனியின் அப்பா தனது மகளுக்கு திருமணம் இருப்பதை கூறுவதற்காக வர ஜான்சிராணி திமிராக நடந்து கொள்கிறார்.
எனவே இதனால் கோபமடையும் ஜனனியின் அப்பா மகளுக்கு திருமணம் வைத்திருக்கிறேன் அதை கூறுவதற்காக தான் வந்தேன் என கூறிவிட்டு கிளம்புகிறார். இதனை அடுத்து தற்பொழுது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் அனைவரும் பேசிக்கொண்டிருக்கும் பொழுது ஈஸ்வரி ஜனனி அப்பாவிடம் உங்களுடைய ஆசைக்காக கல்யாணம் பண்ணிக்கிட்டு பாடாத பாடு பட்டுக்கிட்டு இருக்கா அவளைப் பார்த்து ஃபெயிலியர் என்று சொல்றீங்களே இதுலpl என்னங்க நியாயமாக இருக்கு என்று கூறுகிறார்.
மறுபுறம் கதிர், ஞானம், கரிகாலன் மூன்று பேரும் காரில் வந்து கொண்டிருக்க கதிர் அவர் சொன்னதை பிசிறு தட்டாம செஞ்சு காட்டுறேன் என சொல்ல அதற்கு கரிகாலன் அப்பத்தாவை போட்டு தல்றத்த சொல்றீங்களா என்று கூறுகிறார். பிறகு தனது அப்பாவிடம் ஜனனி எந்த சக்தியை கல்யாணம் பண்ணத்தால நான் தோத்துட்டேன்னு சொல்றீங்களோ அதே சக்தியோட சேர்ந்து நான் ஜெயிக்கப் போறேன்னு என்று சொல்ல இதோடு ப்ரோமோ நிறைவடைகிறது.