பொம்பள புள்ள படிச்சா குடி கெட்டுப்போகும்.. மாமா வராம நான் வரமாட்டேன் ரோட்டிலேயே உட்காரும் கரிகாலன்.! எதிர்நீச்சல் பரபரப்பான ப்ரோமோ

ethirneechal
ethirneechal

Ethirneechal serial today promo: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் தற்போது மீண்டும் ஆதி குணசேகரன் காணாமல் போய் இருப்பது குடும்பத்தினர்களுக்கு அதிர்ச்சியினை கொடுத்துள்ளது. அதாவது எதிர்நீச்சல் சீரியலில் ஆதி குணசேகரன் கேரக்டரில் வேல ராமமூர்த்தி நடித்து வருகிறார்.

இவருடைய கேரக்டர் குணசேகரன் கேரக்டருக்கு பொருத்தமாக இல்லை என ரசிகர்கள் கூறி வருகின்றனர். சொத்துக்கு ஆசைப்பட்டு குணசேகரனை கதிர், ஞானம் ஏதோ செய்து விட்டதாக கூறி போலீசர்களிடம் சக்தி, ஜனனி புகார் கொடுக்கின்றனர். எனவே போலீஸார்களும் இவர்களை கைது செய்து தனியாக அழைத்து சென்று விசாரிக்க திமிராக பேசியதால் கதிர் ஞானத்தை அடிக்க ஆரம்பிக்கிறார்கள்.

இந்த நேரத்தில் குணசேகரன் நடித்து வரும் வேல ராமமூர்த்தி என்ட்ரி கொடுத்து தனது தம்பிகளை காப்பாற்றுகிறார் மேலும் வீட்டிற்கு வந்தவுடன் மருமகள்களை மிரட்டுகிறார். மருமகள்களும் குணசேகரனுக்கு பயந்து அமைதியாக இருக்கிறார்கள். இதனை பயன்படுத்திக் கொள்ளும் கதிர் அனைவரும் கஷ்டப்படுவதை பார்த்து மகிழ்ச்சி அடைகிறார்.

இவ்வாறு போய்க் கொண்டிருக்கும் நிலையில் போலீஸார்கள் திடீரென வந்து உங்கள சும்மா விடமாட்டேன் எனக்கூறி குணசேகரனை அரெஸ்ட் செய்கின்றனர். ஆனால் போலீஸ் ஸ்டேஷனில் குணசேகரன் இல்லாத காரணத்தினால் கதிர், ஞானம் தேடி அலைந்து கொண்டிருக்கிறார்கள் அப்படி தற்பொழுது வெளியாகி இருக்கும்  ப்ரோமோவில் நீதி அரசர் திரு. ராமநாதன் என்றவர் வீட்டிற்கு கதிர், ஞானம் சென்று இங்கு குணசேகரன் என்று யாரையாவது கூட்டிட்டு வந்தாங்களா என்று போலீஸிடம் கேட்க அவர போலீஸ் ஸ்டேஷனுக்கு கூட்டிட்டு போய்ட்டாங்க என சொல்ல கரிகாலன் மாமா வராம இந்த இடத்தை விட்டு போக மாட்டயா வரனுயா என்று கூறுகிறார்.

மறுபுறம் ஜான்சி ராணி ஒட்டுமொத்த குடும்பத்தினர்களும் இருக்க ஜனனி அப்பாவிடம் பொம்பள படிச்சா கெட்டுப் போயிடும் அதுக்கு உதாரணம் தான் இந்த குடும்பம் என்று சொல்ல கோபப்படும் ரேணுகா படிப்பு பத்தி பேச உனக்கு அருகதையே கிடையாது என்று கூற ஜான்சி ராணி சண்டை போடுகிறார். உடனே கோபப்பட்டு ஜனனி ஸ்டாப் பிட் என கத்த பிறகு அப்பா கொஞ்சம் வாங்க என கூற விடுங்க என் கைய என் பொண்ணுக்கு கல்யாணம் அத சொல்லிட்டு போலாம்னு தான் வந்தேன் என கூற அனைவரும் அமைதியாக நிற்கின்றனர்.