Ethirneechal serial today promo: சன் டிவி ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியல் தொடர்ந்து பல திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வரும் நிலையில் தற்பொழுது மீண்டும் குணசேகரன் காணாமல் போய்வுள்ளார். அதாவது குணசேகரன் கேரக்டரில் தற்போது வேல ராமமூர்த்தி அறிமுகமாகி இருக்கும் நிலையில் வீட்டு பெண்களை ஒரு வழி ஆக்கிவுள்ளார்.
குணசேகரன் இல்லாத காரணத்தினால் வீட்டு மருமகள்கள் புதுசாக பிசினஸ் ஆரம்பித்து தங்களது திறமைகளை வெளிப்படுத்தி சம்பாதித்து வந்தனர். மேலும் ஞானம், கதிர் இருவரும் வாயை திறந்தாலே மிரட்டி வந்தார்கள் அப்படி கதிர் ஓவராக பேசியதால் ஈஸ்வரி பளார் என அறைந்தார்.
மேலும் குணசேகரன் அண்ணன் வருவார் என ஞானம், கதிர் கூறிய நிலையில் இதனை ஒரு காரணமாக வைத்துக்கொண்டு சொத்துக்கு ஆசைப்பட்டு கதிர் குணசேகரனை கொன்றுவிட்டதாக சக்தி, ஜனனி போலீசில் புகார் அளித்தனர். அப்படி போலீஸார்களும் இவர்களை தனியாக அழைத்து அடித்து விசாரித்தார்கள்.
இந்த நேரத்தில் குணசேகரன் கேரக்டரில் வேல ராமமூர்த்தி என்ட்ரி கொடுத்து ஒரு மிரட்டு மிரட்டினார். வீட்டில் இருக்கும் மருமகள்களையும் வாய்யடைக்க வைத்தார். ஈஸ்வரியிடம் எதற்காக கதிர அடிச்ச என கேட்டு ஈஸ்வரியையும் பளார் என அறைந்தார்.
இவ்வாறு அனைவரையும் குணசேகரன் மிரட்டிய நிலையில் கதிரின் ஆட்டம் ஓவராக இருந்து வந்தது. இந்த சமயத்தில் திடீரென குணசேகரன் மீண்டும் கிளம்புவதாக கூற விசாலாட்சி, கதிர், ஞானம் அதிர்ச்சடைகின்றனர். இங்கேயே இருக்குமாறு கூறியும் ஆனால் வேலை இருப்பதாக குணசேகரன் கூறுகிறார். இதுபோன்ற பேசிக் கொண்டிருக்கும் பொழுது போலீசார்கள் வந்து குணசேகரன், கதிர், ஞானத்தை கைது செய்து அழைத்து செல்கிறார்கள்.
இவ்வாறு இதனை அடுத்து தற்பொழுது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் ஜனனியின் அப்பா வந்திருக்க அதற்கு ஜனனி என்னப்பா திடீர்னு என்று கேட்க எங்க வீட்டில ஒரு முக்கியமான நிகழ்வு அதான் எங்க சம்பந்திய அழைக்க வந்த என்று கூற மருமகள் குழப்பத்துடன் பார்த்துக் கொள்கின்றனர்.
மறுபுறம் கதிர், ஞானம் போலீஸ் ஸ்டேஷனில் நின்று கொண்டிருக்க அட்விக்கேட் முதலில் ஒரு விஷயத்தை தெரிஞ்சுக்கங்க சார் உங்க அண்ணன் இங்க இல்ல என்று கூறியவுடன் கதிர், ஞானம் சண்டை போடுகிறார்கள். பிறகு விசாலாட்சியிடம் ஈஸ்வரி உங்க பையன் பேசறது தான் முட்டாள்தனமா இருக்கு என்று சொல்ல அதற்கு விசாலாட்சி ஏய் என் புள்ள முட்டாள்னா எவண்டி அறிவாளி அந்த ஜீவானந்தமா என்று கேட்க வீட்டில் இருக்கும் மருமகள்கள் விசாலாட்சியின் மீது கோபப்படுகின்றனர்.