ஜீவானந்தம் சரிவதை பார்த்து என் பொண்டாட்டி கதறி அழனும்.! குணசேகரன் மிரட்டலுக்கு பயந்து நிற்கும் அப்பத்தா…

Ethirneechal serial today promo
Ethirneechal serial today promo

Ethirneechal serial today promo: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் பல திருப்பங்கள் இருந்து வரும் நிலையில் எப்படியாவது ஜீவானந்தத்தை போட்டுத் தள்ள வேண்டும் என்ற முடிவில் குணசேகரன், கதிர் இருந்து வருகின்றனர். எனவே ஜீவானந்தத்தை போட்டு தள்ள ரவுடி கில்லியை கூடவே அழைத்துக் கொண்டு சுற்றி வருகின்றனர்.

அதாவது அப்பத்தா கிராமத்தில் பங்க்ஷன் ஒன்று வைத்திருக்கும் நிலையில் இதற்கு விருந்தினராக ஜீவானந்தத்தை அழைத்துள்ளார். எனவே தன்னுடைய மண்ணுக்கு வந்தவன் மண்ணோடு மன்னா தான் போவானே தவிர வீடு போய் சேர மாட்டான் என குணசேகரன் கூறுகிறார்.

அசிங்கப்பட்ட கூல் சுரேஷ்.. முதன்முறையாக பிக் பாஸ் சீசன் 7-ல் ஜெயிலுக்கு சென்ற அக்ஷயா.! கெடுபுடி காட்டும் பிக் பாஸ்..

மருமகள்களும் குணசேகரனுக்கு எதிராக போராடி வருகிறார்கள் ரவுடி கில்லி ஜீவானந்தத்தை பற்றி தெரியாமல் பேசிக்கொண்டு இருக்கீங்க என்று குணசேகரனை எச்சரித்தும் கேட்கவில்லை. மேலும் கதிரும் நான் அவனை பார்த்துக் கொள்கிறேன் என கூறுகிறார். இவர்கள் பேசிக் கொண்டிருப்பதை நந்தினி ஒட்டி கேட்பதை கதிர், குணசேகரன் பார்த்து விடுகிறார்கள்.

மேலும் வெண்பாவை ஈஸ்வரி அழைத்து வந்த நிலையில் அதனை ஜான்சி ராணி விசாலாட்சி இடம் கூட விசாலாட்சி மருமகள்களை விசாரிக்கிறார். இவ்வாறு போய்க் கொண்டிருக்கும் எதிர்நீச்சல் சீரியலில் இன்றைய ப்ரோமோவில் குணசேகரன் கில்லியிடம் யோ கில்லி அவன் சரியிறத பார்த்து என் பொண்டாட்டி கதறி கதறி அழுகணும் ஆமா என்று சொல்ல அதற்கு கில்லி நினைக்கிற எல்லாமே நடக்கும் என கூறுகிறார்.

லியோ வெற்றி விழாவில் விடாமுயற்சி அப்டேட் கொடுத்த நடிகை த்ரிஷா.? இது போதும் எங்களுக்கு..

இதனை அடுத்து கதிர், ஞானம் என அனைவரும் அமர்ந்து சாப்பிட்டு கொண்டிருக்க மருமகள் நின்று கொண்டிருக்கின்றனர். இதனை பார்த்த அப்பத்தா சாப்பிட சொல்ல சும்மா உசுப்பேத்தி உசுப்பேத்தி அதுங்க எல்லாத்தையும் கெடுத்து வெச்சி இருக்க என்று கதிர் கூறுகிறார்.

அதற்கு அப்பத்தா எல்லாம் சமமாக உட்கார்ந்து சாப்பிட்டால் என்ன என கேட்க அதற்கு ஜீவானந்தம் கூடாது குடும்பத்துக்கு ஒரு முறை இருக்கு கலாச்சாரம் இருக்கு புதுசா ஒன்னும் செஞ்சிட முடியாது, பாக்கலாமா என அப்பத்தா கேட்க யாரு நடத்துறாங்கனு பாத்துடலாம் என குணசேகரன் கூறுகிறார்.