Ethirneechal serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில் தொடர்ந்து ஏராளமான திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வருகிறது. அந்த வகையில் அப்பத்தாவின் 40% சொத்தை எப்படியாவது ஆட்டையை போட்டு விட வேண்டும் என குணசேகரன் நினைத்து வந்த நிலையில் அதற்கு ஆப்பு வைத்து ஜீவானந்தம் அந்த சொத்தை ஆட்டையை போட்டு இருக்கிறார்.
இது ஒட்டுமொத்த குடும்பத்திற்கும் தெரியவர அனைவரும் கதி கலங்கி நிற்கின்றனர். இதனால் குணசேகரனுக்கு உடல்நிலை சரியில்லாமல் போக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார். எனவே தனது கணவருக்காக ஈஸ்வரி கௌதமை சந்தித்து பேசுகிறார் ஜீவானந்தம் யார் எப்படிப்பட்டவர் என கேட்க அவர் மிகவும் நல்லவர் என கூற இதனால் கோபமடைகிறார் ஜனனி.
கௌதம் ஜீவானந்தத்தின் ஆள் என தெரிந்ததால் நந்தினி, ஜனனி, ஈஸ்வரியின் அனைவரும் கோபத்தில் இருந்து வருகின்றனர். இதற்கு மேல் கௌதம் தன்னுடைய நண்பன் கிடையாது என நினைக்கும் அளவிற்கு ஜனனி வந்திருக்கிறார். இவர்களுடைய நன்மைக்காக தான் ஜீவானந்தம் இவ்வாறு செய்கிறார் என்பது விரைவில் தெரியவரும்.
இவ்வாறு மருமகள்கள் அனைவரும் ஜீவானந்தத்திற்கு எதிராக போராட இருக்கின்றனர். இந்நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் குணசேகரன் வீட்டிற்கு வர அவருடைய அம்மா அதிர்ச்சியடைகிறார். இருந்தாலும் குணசேகரன் மேல் மருமகள்கள் கோபமாக தான் இருந்து வருகின்றனர்.
அதாவது, தற்பொழுது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் மருத்துவமனையில் இருந்து குணசேகரன் வீட்டிற்கு வர இதனைப் பார்த்தவுடன் குணசேகரனின் அம்மா வருத்தப்படுகிறார். மேலும் குணசேகரன் சாமி போட்டோ முன் நின்றுக் கொண்டு அம்மா தாயே இன்னைக்கு ஒரு கையால தான் கும்பிட முடியும் என பெரிதாக ட்ராமா போட ஜனனி, நந்தினி இவரைப் பார்த்து எதற்கு இப்படி ட்ராமா போடுகிறார் என்பது போன்று பார்க்கிறார்கள்.