Ethirneechal serial: சன் டிவி ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில் தொடர்ந்து டிஆர்பியில் முன்னணி வகித்து வருகிறது. அப்படி ஜீவானந்தம் தற்பொழுது அப்பத்தாவின் 40% தன்னுடைய பெயரில் எழுதிக் கொண்டதனால் குணசேகரன் உள்ளிட்ட மொத்த குடும்பமும் பயங்கர ஆப் செட்டில் உள்ளார்கள்.
ஜீவானந்தம் அப்பத்தாவின் சொத்தை ஆட்டையை போட்டதை ஏற்றுக்கொள்ள முடியாமல் குணசேகரன் தவித்து வருகிறார். மேலும் குடும்பத்தில் இருக்கும் பெண்கள் அனைவரும் ஜீவானந்தத்திற்கு எதிராக போராட இருக்கின்றனர். ஒரு பக்கம் சொத்து போய்விட்டது, மறுபுறம் மருத்துவமனை குணசேகரன் என பல பிரச்சனைகள் இருந்தாலும் கொஞ்சம் கூட அனைத்து பெண்களுக்கும் குசும்பு குறையவில்லை.
தொடர்ந்து குணசேகரனை அசிங்கப்படுத்தி வருகிறார்கள். அந்த வகையில் தற்பொழுது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் குணசேகரன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இவரைப் பார்ப்பதற்காக நந்தினி, ஜனனி, ஈஸ்வரி மருத்துவமனைக்கு வருகிறார்கள். அங்கு நந்தினி கரிகாலனிடம் என்ன ஆச்சு என்று கேட்க மாமாவுக்கு ஒரு பக்கம் விளங்காமல் போய்விட்டதாக கூறுகிறார். அதை எதுக்குடா இப்படி சொல்ற என்று நந்தினி கேட்க உயிருக்கு எந்த பிரச்சனையும் இல்ல அது வரையும் சந்தோஷம் என்று சொல்கிறார்.
பிறகு குணசேகரன் நந்தினியிடம் என்னம்மா சும்மா எட்டி எட்டி பார்த்துகிட்டு இருக்க என்று கேட்க கில்ட்டியா இருக்கு சாரி மாமா என சொல்ல இங்கிலீஷ் பேசுற நேரா மா இது? என குணசேகரன் சொல்கிறார் இவ்வாறு இந்த நிலைமையிலும் நந்தினிக்கு இருக்கும் நக்கல் கொஞ்சம் கூட குறையவில்லை.
இவ்வாறு போய்க்கொண்டிருக்கும் நிலையில் விரைவில் ஜீவானந்தம் யார் என்பது குறித்து தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக அனைவரும் ஆர்வமுடன் இருந்து வருகிறார்கள். மேலும் அப்பத்தா எழுந்தால் மட்டுமே அனைத்து பிரச்சனைகளுக்கும் விடிவு காலம் வரும் எனவும் நினைக்கின்றனர்.