Ethirneechal: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் ஜீவானந்தம் குணசேகரன் உடன் நேராக மோத ஆரம்பித்திருக்கும் நிலையில் ஒவ்வொரு ட்விஸ்ட்களும் அதிரடியாக இருந்து வருகிறது.
அந்த வகையில் குணசேகரன் எப்படியாவது அப்பத்தாவின் 40% சொத்தை ஆட்டையை போட வேண்டும் என நினைத்த நிலையில் அதற்கு தான் தற்பொழுது ஆப்பு வந்துள்ளது. எப்படியோ ஜீவானந்தம் அப்பத்தாவின் 40% சொத்தை தன்னுடைய பெயரில் எழுதி வாங்கியுள்ளார். இதனால் மொத்த குடும்பமும் கதி கலங்கி நிற்கிறது முக்கியமாக குணசேகரன் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து வருகிறார்.
இத்தனை நாட்களாக அப்பத்தாவின் கைரேகையை வாங்கியது குணசேகரன் தான் என ஜனனி நினைத்து வந்த நிலையில் தற்போது அது ஜீவானந்தம் என வெட்ட வெளிச்சம் ஆகியிருக்கிறது. இந்நிலையில் தற்போது வெளியாகி உள்ள ப்ரோமோ வீடியோவில் குணசேகரனை குண்டு கட்டாக கட்டி தூக்கி செல்கிறார்கள்.
அதாவது, தற்பொழுது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் கௌதம் ஜீவானந்தத்துடன் வருவதை பார்த்த ஜனனி கௌதம் நீங்க என்ன பண்ற உனக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்? எனக் கேட்க அதனை எல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ளாத கௌதம் குணசேகரனை பார்த்து 40% சொத்துக்கானவர்கள் நாங்க தான் எனக் கூறுகிறார்.
அதற்கு குணசேகரன் ஒரு வீடு ஒன்னு இருக்கே அப்பா என நக்கலாக சொல்ல அதுவும் லிஸ்ட்ல இருக்கு என கௌதம் சொல்கிறார். இதனால் கோபமடைந்து பொங்கி எழுந்த குணசேகரன் ஒரு ஆணியை கூட நீ புடுங்க முடியாதுடா என சேரை தூக்கி போட்டு உடைக்கிறார்.
இதனால் கடுப்பான ஜீவானந்தத்தின் ஆட்கள் குணசேகரனை குண்டு கட்டாக கட்டி தூக்கி செல்ல காதிர் பின்னாடியே ஓடுகிறார் இதோடு இந்த நிறைவடைகிறது. இவ்வாறு கெத்தாக இருந்த குணசேகரனை தற்பொழுது இப்படி ஒரு நிலையில் பார்ப்பதற்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறது.