Ethirneechal serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்த சீரியலில் வர வர குணசேகரன் மற்றும் ஜனனியின் கேரக்டர் மிகவும் டம்மி ஆகி வருகிறது ஆனால் கரிகாலன் கலக்கி வருகிறார். இவருடைய நடிப்புக்கும் பேச்சுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில் சில காலங்களாக குணசேகனனை பங்கம் பண்ணி வருகிறார் கரிகாலன்.
அப்பத்தாவின் 40% சொத்தை ஜீவானந்தம் தன்னுடைய பெயரில் யாருக்கும் தெரியாமல் மாற்றிக் கொண்டார். அதனை குணசேகரன் தனது பெயரில் மாற்ற வேண்டும் என்பதற்காக பல முயற்சிகளை செய்து வருகிறார். எனவே இதற்காக சென்னை கிளம்பி சென்று அங்கு ஜீவானந்தத்தை தீர்த்து கட்ட ஆட்களை தயார் செய்து வைத்திருக்கிறார்.
மறுபுறம் சக்தி, ஜனனி இருவரும் ஜீவானந்தத்தை பற்றிய தெரிந்துக் கொண்டு வருகிறார்கள். ஈஸ்வரியும் ஜீவானந்தத்திடம் போனில் பேசியிருக்கிறார் இவ்வாறு அனைவரும் சொத்துக்காக பல முயற்சிகளை செய்து வருகின்றனர். அந்த வகையில் தற்பொழுது வேறு ஒரு புதிய ஆடிட்டர் வந்திருக்கும் நிலையில் அவர் ஜீவானந்தத்தின் பெயரில் இருக்கும் சொத்து தப்பாக எழுதப்பட்டதாக நிரூபியுங்கள் என கூறுகிறார்.
அது எப்படி செய்யணும் அதற்கு முதலில் வழி சொல்லுங்கள் என குணசேகரன் கேட்கிறார். இந்த நேரத்தில் கரிகாலன் அவருக்கு தெரிஞ்சா சொல்ல மாட்டாரா என அசிங்கப்படுத்துகிறார் மறுபுறம் ஆனால் இதனை ஆதாரத்துடன் நிரூபித்தாலும் ஒன்றும் வேலைக்கு ஆகாது எனவே சக்தி ஜீவானந்தம் குறித்த விவரங்களை எடுத்து வருவதற்காக சென்று உள்ளான் அவன் வந்தவுடன் ஜீவானந்தத்தை பார்ப்பதற்காக நான் கிளம்புகிறேன் என ரேணுகா நந்தினி ஆகியோர்களிடம் கூறுகிறார் இதோட ப்ரோமோ நிறைவடைகிறது.
இவ்வாறு அப்பத்தாவின் 40% சொத்தை ஜீவானந்தத்திடம் இருந்து கைப்பற்ற வேண்டும் என்பதற்காக குடும்பத்தில் இருப்பவர்கள் அனைவரும் முயற்சி செய்து வருகிறார்கள். என்னதான் நடக்க போகிறது என்பது இதுவரையிலும் புரியாத புதிராக இருந்து வருகிறது. ஆனால் கரிகாலனின் சீன்கள் ஹைலைட்டாக இருந்து வருகிறது.