Ethirneechal serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஏராளமான சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் தற்பொழுது பல விறுவிறுப்பான எபிசோடுகளுடன் ஒளிபரப்பாகி வரும் முக்கியமான சீரியல் தான் எதிர்நீச்சல். இந்த சீரியலில் ஜீவானந்தம் அப்பத்தாவின் 40% சொத்தை ஆட்டைய போட்டதனால் அதனை கைப்பற்ற வேண்டும் என்பதற்காக குணசேகரன் பல முயற்சிகளை செய்து வருகிறார்.
அந்த வகையில் பக்கவாதம் வந்தது போல் நடித்த நிலையில் இதனை வைத்து ஒட்டுமொத்த பெண்களும் இவரை கேலி செய்து வருகிறார்கள். மறுபுறம் ஜீவானந்தம் யார் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக ஜனனி, சக்தி பலரிடம் உதவி கேட்டு வருகின்றனர். இவ்வாறு இது ஒருபுறம் போய்க்கொண்டிருக்கும் நிலையில் மறுபுறம் ஆதிரை எப்படியாவது அருணை சந்தித்து பேசிவிட வேண்டும் என்று முடிவெடுக்கிறார்.
அப்படி தனது குடும்பத்தினர்களுக்கு தெரியாமல் அருணின் வீட்டிற்கு சென்ற நிலையில் அருண் எனது வாழ்க்கையில் ஆதிரை என்ற பெண் கிடையாது என்று கூறி அனுப்பி வைத்து விடுகிறார். பிறகு கரிகாலன் எனக்கு டைம் கொடு நான் உன்னுடைய மனதில் இடம் பிடிக்கிறேன் எனக்கும் மனசு இருக்கு என கூறி காலில் விழுந்து அழுகிறார். இவ்வாறு கரிகாலன் ஆதிரை மேல் வைத்திருக்கும் அன்பை பார்த்து விசாலாட்சிக்கு மனம் இறங்கி விடுகிறது.
தற்பொழுது ரேணுகா குணசேகரனிடம் அனைவர் முன்பும் சண்டை போட்ட நிலையில் பிறகு வெளியில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்பொழுது வந்த கரிகாலன் இந்த வீட்டில் தான் என்னுடைய உயிர், உலகம் எல்லாம் இருக்கு என சொல்ல எல்லாத்தையும் அடுத்தவ வீட்ல ஏன் வச்சிருக்க என்று குணசேகரன் கேட்கிறார்.
அதற்கு கரிகாலன் இப்படி விவரமா பேசுற மாதிரி பேசிடு ஆனா முட்டாப் பய மாதிரி கேள்வி கேட்கிற எனக் கூறி அசிங்கப்படுத்துகிறார். பிறகு ஜனனி நந்தினி ரேணுகாவிடம் பேசுவதற்காக வர இந்த நேரத்தில் கரிகாலன் வருவதனால் ஜனனி ஒலித்துக் கொள்கிறார். இதோடு ப்ரோமோ நிறைவடைகிறது.