Ethirneechal serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் தற்பொழுது ஆதி குணசேகரனுக்கு அதிர்ச்சி கொடுக்கும் வகையில் ஜீவானந்தம் அப்பத்தாவின் 40% சொத்தை ஆட்டையை போட்டு உள்ளார். இது தெரிந்தவுடன் ஒட்டுமொத்த குடும்பமும் அதிர்ச்சியில் இருந்து வரும் நிலையில் எப்படியாவது ஜீவானந்தத்திடம் 40% மீண்டும் பெறவேண்டும் என்பதற்காக போராடி வருகின்றனர்.
இந்நிலையில் குணசேகரன் தனக்கு பக்கவாதம் ஏற்பட்டது போல நடித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். பிறகு வீட்டிற்கு வந்தவுடன் ஜீவானந்தத்தை தேடு பணியில் ஈடுபட்டு வருகிறார். அப்படி குணசேகரன் கதிர் இரண்டு பேரும் சென்னைக்கு சென்று ஜீவானந்தத்தை தீர்த்து கட்ட ஆள் தயார் செய்துள்ளனர்.
அதன் பிறகு தான் தனக்கு பக்கமாதம் வந்தது போல ஜீவானந்தம் நடித்துள்ளார் என்பது அனைவருக்கும் தெரிய வந்தது. இவ்வாறு நடித்தால் குடும்பத்தில் இருப்பவர்கள் அனைவரும் இறக்கப்பட்டு சொத்துக்களை மீட்க வேண்டும் என போராடுவார்கள் இதன் மூலம் அப்பத்தாவின் சொத்தை தனது பெயரில் எழுதி வைக்கலாம் என்று பிளான் போட்டுள்ளார்.
இதனை அடுத்து ஈஸ்வரி ஜீவானந்தரிடம் பேச வேண்டும் என்பதற்காக கௌதமிடம் உதவி கேட்க ஆனால் ஜீவானந்தம் ஈஸ்வரியை பார்க்க மறுத்துள்ளார். பிறகு போனில் பேச ஒப்புக்கொண்டதால் நீங்க குணசேகரன் மனைவி என்பதனால் நான் உங்களிடம் பேசவில்லை ஈஸ்வரி என்ற பெயர் எனக்கு பிடித்தமானது அந்த ஒரு காரணத்தினால் தான் பேசுகிறேன் என்று கூறி குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளார்.
இந்நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் ரேணுகா எதிர்த்து பேசிக் கொண்டிருக்க பேச்சி எல்லாம் ரொம்ப ஓவரா இருக்கு என ஞானம் சொல்கிறார். அதற்கு குணசேகரன் அது ரொம்ப நாளா அப்படித்தான் போயிட்டு இருக்கு என்று சொல்ல இதற்கு ரேணுகா பக்கவாதம் வந்த யாரையும் நான் இப்படி பார்த்ததே இல்லை பக்காவான பக்கவாதமால இருக்கு என சொல்கிறார். பிறகு ஞானம் குணசேகரன் பேசிக் கொண்டிருக்க குணசேகரன் பக்கவாதம் வந்தது போல நடிக்க அதனையும் முட்டாள் ஞானம் நம்பி வருகிறார்.