Ethirneechal serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில் நாளுக்கு நாள் எதிர்பார்ப்பு அதிகரித்துக் கொண்டு செல்கிறது. அப்படி ஒரு கட்டத்தில் கெத்தாக இருந்து வந்த ஜனனி டம்மி பீஸ்சாக இருந்து வருகிறார். ஜீவானந்தம் ஈஸ்வரி கேரக்டர் குறித்த ரகசியம் விரைவில் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அந்த வகையில் சமீப காலங்களாக கரிகாலன் கேரக்டருக்கும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்க தொடங்கியிருக்கும் நிலையில் இதுவரையிலும் பைத்தியக்காரன், முட்டாள் என நினைத்து வந்த இவர் நேற்று தனது மனதில் இருப்பதை அனைவரும் முன்பும் போட்டு உடைத்துள்ளார்.
பேசிய வார்த்தைகளில் அனைத்தும் இவருடைய கஷ்டங்கள் வெளிப்பட்ட நிலையில் ஜான்சி ராணியை இதனை பார்த்து கண் கலங்கினார். இவ்வாறு இவருடைய பேச்சை பார்த்து குணசேகரின் அம்மாவும் மனம் இறங்கி உள்ளார் இவருடைய எதார்த்தமான பேச்சு அனைவரையும் கவர்ந்துள்ளது.
ஆனால் ஆதிரை அருணை நினைத்து கரிகாலனை வெறுத்து வரும் நிலையில் கரிகாலன் ஆதிரையிடம் ஒரு வாரம் டைம் வேண்டு அதைக் கொடுத்தால் உன் மனதை நான் மாற்றி விடுகிறேன் எனக் கூறியுள்ளார். இவ்வாறு இதனை ஆதிரை ஏற்றுக்கொண்டால் கண்டிப்பாக இருவரும் மகிழ்ச்சியாக வாழ வாய்ப்பு இருக்கிறது.
மறுபுறம் ஈஸ்வரி ஜீவானந்தத்தை பார்க்க வேண்டும் என கௌதமியிடம் கேட்கிறார் எனவே கௌதம் ஈஸ்வரிக்கு போன் பண்ணி ஜீவானந்தம் உங்களை பார்க்க மறுத்துவிட்டார் ஆனால் அதற்கு பதிலாக போன் நம்பர் கொடுக்கிறேன் நீங்கள் பேசுகிறீர்களா என்று கேட்க பிறகு ஜீவானந்தம் ஈஸ்வர் இருவரும் பேச ஆரம்பிக்கின்றனர்.
உடனே ஜீவானந்தத்தின் முகம் மாற இதனை தொடர்ந்து ஈஸ்வரி நான் குணசேகரன் மனைவி என்று தொடங்கி பல விஷயங்களை பகிர்கிறார். அதற்கு ஜீவானந்தம் சில விஷயங்கள் நாட்கள் போகப்போக தான் புரியும் இப்பொழுது உங்களுக்கு நான் தப்பாகத் தெரிகிற மாதிரி கூடிய சீக்கிரம் என்னை புரிந்து கொள்ள நேரம் வரும் என்று சொல்கிறார். அத்துடன் நீங்கள் குணசேகரன் மனைவி என்பதால் நான் பேசவில்லை ஈஸ்வரி எனக்கு பிடித்தமான பெயர் அதை மறுக்க முடியாமல் தான் நான் பேசுகிறேன் என்று ட்விஸ்ட் வைக்க ஈஸ்வரி குழப்பம் அடைகிறார்.