Ethirneechal serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில் குணசேகரன் வீட்டு மருமகள் அனைவரையும் அனுப்பி வைத்து எப்படியாவது சொத்தை கிழவியிடமிருந்து பெற்று வருமாறு கூறி அனுப்பி வைத்துள்ளார்.
எனவே இதற்காக ஜனனி, ஈஸ்வரி, ரேணுகா மற்றும் நந்தினி ஆகியோர்கள் ஜீவானந்தத்தை தேடி அவருடைய சொந்த ஊருக்கு வருகின்றனர். ஜீவானந்தத்திற்கு இப்படி ஒரு நிலைமை ஏற்படும் என்று நினைக்கவே இல்லை அதுவும் நான் சம்பந்தப்பட்ட ஒருவரால் அவருடைய வாழ்க்கையில் இப்படி நடந்திருப்பது மிகவும் கஷ்டமாக இருப்பதாக கூறி கண்கலங்குகிறார்.
ஜீவானந்தத்தின் மேல் வைத்த காதல் தற்போது வரையிலும் ஈஸ்வரியின் மனதில் இருந்து வருகிறது. மறுபுறம் குணசேகரன் ரவுடியை மீண்டும் அழைத்து ஜீவானந்தத்தை தீர்த்து கட்ட முடிவு செய்துள்ளார். இவ்வாறு என்ன நடந்தாலும் பரவாயில்லை எனக்கு சொத்து தான் முக்கியம் என்பதில் தெளிவாக இருந்து வருகிறார்.
எனவே இதற்காக அப்பத்தாவிடம் சொத்தை எழுதி தருமாறு கேட்க அப்பத்தா முடியாது என மறுத்து விட்டதால் வீட்டில் இருக்கும் பெண்களை கிழவியை சமாதானப்படுத்துமாறு கூறிய அனுப்பி வைத்துள்ளார். இந்நிலையில் தற்பொழுது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் அதிரை கரிகாலனுடன் சண்டை போட்டுக் கொண்டிருக்க இதனைக் கேட்டு வந்த குணசேகரன் என்ன இங்க பிரச்சனை என கேட்க நான் தான் பிரச்சனை பண்ணிக்கிட்டு இருக்கேன் என ஆதிரை கூறுகிறார்.
விசாலாட்சியிடம் குணசேகரன் வீட்ல இருக்கிற பொம்பளைங்களோடு சேர்ந்துக்கிட்டு ஏதாச்சும் பண்ணுனானா உனக்கு பொண்ணு இருக்க மாட்டா என்று மிரட்டுகிறார். மறுபுறம் ஜீவானந்தம் வீட்டிற்கு ஜனனி, ஈஸ்வரி சென்றிருக்கும் நிலையில் அங்கு ஜீவானந்தத்தின் பெண் உங்கள பார்க்கும் போது எங்க அம்மா மாதிரியே இருக்கீங்க எனக் கூற உடனே ஈஸ்வரி அழக்கூடாது என அந்த குழந்தையை கட்டிப்பிடித்துக்கொண்டு கண் கலங்குகிறார். இதனைப் பார்க்கும் ஜீவானந்தத்திற்கும் கண்கலங்குகிறது.