Ethirneechal serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துவரும் நிலையில் தொடர்ந்து பல திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வருகிறது. அப்பத்தாவும் கோமாவில் இருந்து கண் விழித்திருக்கும் நிலையில் எப்படியாவது ஜீவானந்ததிடம் இருந்து 40% சொத்தை அடைய வேண்டும் என்பதற்காக குணசேகரன் பல முயற்சிகளை செய்து வருகிறார்.
அப்பத்தாவிடம் தன்னுடைய பெயரில் சொத்தை எழுதி தருமாறு குணசேகரன் கேட்க அதற்கு விடாப்பிடியாக முடியாது என்று அப்பத்தா சொல்கிறார். பிறகு அப்பத்தா, ஜீவானந்தம் மற்றும் ஜனனி மூன்று பேரும் நேரடியாக போலீசை சந்தித்து பேசி விடுகிறார்கள்.
எனவே குணசேகரன் எவ்வளவு முயற்சி செய்தாலும் 40% சொத்தை ஜீவானந்தத்தின் உதவியில்லாமல் பெற முடியாது என்ற நிலையில் ஏற்பட்டுள்ளது. எனவே இதன் காரணமாக குணசேகரன் தற்போது வீட்டு பெண்களிடம் சரணடைந்து இருக்கிறார்.
அதாவது தற்பொழுது குணசேகரன் வீட்டில் இருக்கும் மருமகள்களை அனுப்பி வைத்து கிழவியின் மனதை மாற்றி சொத்தை வாங்கிக் கொண்டு வருமாறு கூறியுள்ளார் எனவே வீட்டில் இருக்கும் அனைத்து பெண்களும் கிளம்பி செல்கின்றனர்.
அப்படி தற்பொழுது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் ரவுடியை போன் செய்து குணசேகரன், கதிர் வீட்டிற்கு வரவழைக்கின்றனர். மறுபுறம் ஜனனி காரில் சென்று கொண்டிருக்கும் பொழுது ஜீவானந்தத்தையோ அவருடைய குழந்தையையோ பார்த்து யாரும் வருத்தப்படாதீங்க அப்புறம் நம்ம தேடி போற உதவியும் கிடைக்காமல் போய்விடும் என கூறுகிறார்.
இதனை அடுத்து அந்த ரவுடி வீட்டிற்கு வர குணசேகரன், கதிர் மூன்று பேரும் வெளியில் பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்பொழுது அந்த ரவுடி உங்களுக்கு வேலை ஆகணும்னா என்ன தேடி வருவீங்க வேலை முடிஞ்சுருச்சுன்னா அப்படியே கட் பண்ணி விட்டுட்டு நகர்ந்து விடுவீங்க என கத்துகிறார். இந்த குரல் கேட்டவுடன் விசாலாட்சி யாருப்பா அது என கேட்கிறார். இவ்வாறு குணசேகரன் மீண்டும் அந்த ரவுடியின் உதவியுடன் ஜீவானந்தத்தை தீர்த்தக்கட்ட முடிவு செய்துள்ளார்.