Ethirneechal serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில் தற்போது அனைவரும் எதிர்பார்த்து காத்து வந்த ட்விஸ்ட் நிறைவேறி உள்ளது எனவே இதற்கு அடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதற்காக ரசிகர்கள் மிகவும் ஆர்வமுடன் காத்து வருகின்றனர்.
அப்பத்தாவின் சொத்தை குணசேகரன் எப்படியாவது கைப்பற்ற வேண்டும் என நினைத்து வந்த நிலையில் ஆனால் அதற்க்குள் ஜீவானந்தம் அந்த சொத்தை தன்னுடைய பெயரில் எழுதி வைத்துக்கொண்டார் எனவே குணசேகரனுக்கு பைத்தியம் பிடித்தது போல் இருந்து வருகிறது.
இதன் காரணமாக ஜீவானந்தத்தை தீர்த்து கட்டுவதற்காக குணசேகரன் அடியாட்களுடன் கதிரை அனுப்பி வைத்துள்ளார். மறுபுறம் ஜனனி ஜீவானந்தத்தை தேடி அலைந்து கொண்டிருக்க கிராமம் ஒன்றுக்கு சென்று அங்கு பெரியவரின் உதவியுடன் தேடி வருகிறார்.
அந்த ஊரில் இருக்கும் மக்கள் ஜீவானந்தம் குறித்து நல்லவிதமாக கூறிவரும் நிலையில் இவரை கிளம்ப சொல்கின்றனர் ஆனால் ஜனனி முடியாது எனக் கூற பிறகு அந்த பெரியவர் ஜீவானந்தம் அவனுடைய மனைவி, மகளை பார்க்க சில சமயம் வருவான் எனவே அப்பொழுது உன்னை அழைத்து செல்கிறேன் என குறி தன்னுடைய வீட்டில் தங்க வைக்கிறார்.
பிறகு ஜீவானந்தம் வருவதை தெரிந்து கொண்டு ஜனனி தனியாக தேடி செல்ல மறுபுறம் கதிர் அடி ஆட்களுடன் காட்டில் இருக்கிறார். அதேபோல் அந்த காட்டு வழியாக தனியாக ஜீவானந்தம் நடந்து வருகிறார். இவ்வாறு போய்க் கொண்டிருக்கும் நிலையில் இத்தனை நாட்களாக கோமாவில் இருந்த அப்பத்தா கண் முழித்து உள்ளார்.
கட்டிலில் இருந்து இறங்கி நடந்து வர இதனை பார்த்த குடும்பம் மொத்தமும் சந்தோஷப்படுகிறது ஆனால் அப்பத்தா எதுவுமே பேசாமல் அமைதியாக இருக்கிறார் இந்த நேரத்தில் ஞானம் குணசேகரனுக்கு போன் பண்ணி உடனே வருமாறு சொல்கிறார். ஆவேசமாக உள்ளே வரும் குணசேகரன் இன்னும் சாகாம இருக்க நீ கண்ணை மூடிக்கிட்டு நிம்மதியாய் தூங்கிட்ட ஆனா மதுரைக்குள்ள நான் பைத்தியக்கார மாதிரி தெரிஞ்சுகிட்டு இருக்கேன் நான் உனக்கு என்ன துரோகம் செஞ்சேன் என்னை ஏன் இப்படி அலையவிட்ட எனக் கேட்டு கத்த அப்பத்தா அமைதியாகவே இருக்கிறார்.
நந்தினியும் ரேணுகாவும் சேர்ந்து அவருக்கு பதிலடிக்க கொடுக்க ஞானம் ஆடிட்டர், வக்கீல் இருவரையும் போன் பண்ணி வர சொல்கிறார். இவ்வாறு இப்படிப்பட்ட சூழ்நிலையில் தற்பொழுது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் ஜீவானந்தம் தன்னுடைய வீட்டிற்கு வந்து விடுகிறார். இந்த பக்கம் குணசேகரன் அப்பத்தா வாய் திறக்காமல் இருப்பதால் கடுப்பாக எல்லா பொம்பளையும் கிரிமினலாய் இருந்தா ஒரு மனுஷன் எப்படி வாழுறது வயசு 80 கிழவியிலிருந்து 8 வயது தாரா வரை எல்லாருக்கும் பயப்பட வேண்டியதாயிருக்கு இன்னைக்கு எல்லாத்துக்கும் முடிவு கட்டுறேன் எனக் கூற நிறைவடைகிறது.