Ethirneechal serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில் தொடர்ந்து ஏராளமான திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வருகிறது. அப்பத்தாவின் 40% சொத்து கிடைக்க வேண்டும் என்பதற்காக ஒட்டுமொத்த குடும்பத்தினர்களும் ஜீவானந்தத்தை தேடி அலைந்து கொண்டிருக்கிறார்கள்.
ஆனால் ஜீவானந்தம் எங்கு செல்கிறார் என்பது யாருக்கும் தெரியவில்லை இவ்வாறு போய்க் கொண்டிருக்கும் நிலையில் குணசேகரன் யாருக்கு என்ன ஆனாலும் பரவாயில்லை சொத்து தனக்கு வர வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார். அதேபோல் ஜனனியும் அப்பத்தாவிற்கு கிடைக்க வேண்டிய சொத்தை நியாயப்படி வாங்கி தந்து விட வேண்டும் தெளிவாக உள்ளார்.
சமீப காலங்களாக குணசேகரனின் கேரக்டர் கம்மியாக இருந்து வரும் நிலையில் தொடர்ந்து கரிகாலன் இவரை அசிங்கப்படுத்தி வருகிறார். இதனை அடுத்து சக்திக்கு அம்மை போட்டிருப்பதால் இந்த நேரத்தில் ஜீவானந்தம் குறித்த தகவல் கிடைக்கிறது. எனவே சக்தியை அனுப்பாமல் ஜனனி கிராமத்திற்கு செல்கிறார்
அங்கு கிராமத்தில் இருக்கும் பெரியவரின் உதவியுடன் அவரின் வீட்டில் தங்கியிருக்கும் நிலையில் அவருடைய உதவியினால் ஜீவானந்தத்தை சந்திக்க உள்ளார். இவ்வாறு தற்போது வெளியாகியிருக்கும் ப்ரோமோவில் கதிர் ஒருவரின் உதவியுடன் காட்டில் நடந்து கொண்டிருக்க ஒருபுறம் ஜீவானந்தம் காரில் வருகிறார்.
பிறகு ஜனனி தனியாக அமர்ந்து யோசித்துக் கொண்டிருக்கிறார். இதனை அடுத்து குணசேகரன், ஞானம் இருவரும் நின்று கொண்டிருக்க கரிகாலன் மாமா பாவம் எல்லாரும் அவரு ஜெயிச்சீட்டு இருக்காங்கன்னு சொல்றாங்க ஆனா அவர் ஒவ்வொன்றிலும் தோத்துகிட்டு இருக்காரு என சொல்ல இதற்கு கோபப்பட்டு குணசேகரன் என்ன அசிங்கப்படுத்துறியா.?
கதிர ஒரு வேலையா அனுப்பிச்சி இருக்கேன் அவன் வரும்போது பிணமா கூட வரலாம் என கூற ஞானம் அதிர்ச்சி அடைகிறார் இதனை கேட்ட நந்தினி எடு கட்டைய என்று வீராப்பாக எழுந்து சென்று என்ன பேசுறீங்க இப்ப அவர் இங்க வரணும் என கோபமாக கேட்கிறார் இதோடு இந்த ப்ரோமோ நிறைவடைகிறது.