Ethirneechal serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியல் விறுவிறுப்பான எபிசோடுகளுடன் ஒளிபரப்பாகி வரும் நிலையில் குணசேகரன் டம்மி பீஸ்சாக இருந்து வருகிறார். ஜீவானந்தத்திடம் எப்படியாவது அப்பத்தாவின் 40% சொத்தை மீட்டு எடுக்க வேண்டும் என்பதற்காக பல முயற்சிகளை செய்து வரும் நிலையில் முட்டாள்தனமாக யோசித்து வருகிறார்.
இவ்வாறு குணசேகரன் முட்டாள்தனமாக இருப்பதை பார்த்து கரிகாலன் தொடர்ந்து கவுண்டர்களை போட்டு வருவதனால் இவருடைய கேரக்டர் ரசிக்கும் வகையில் அமைந்துள்ளது. அந்த வகையில் தற்பொழுது கரிகாலன் கேரக்டர் தான் பிரபலமாக இருந்து வருகிறது.
மறுபுறம் முட்டாள் ஜனனி ஜீவானந்தத்தை பற்றி தெரிந்து கொண்டு சந்தித்துப் பேச வேண்டுமென முடிவெடுத்திருக்கிறார். இந்நிலையில் புதிய ஆடிட்டர் ஒருவர் வந்திருக்கும் நிலையில் அவர் ஜீவானந்தம் தனது பெயரில் அப்பத்தாவின் சொத்தை எழுதிக் கொண்டது மிகவும் தவறு என்பதை நிரூபிக்குமாறு கூற அது எப்படின்னு சொல்லுங்க என்று குணசேகரன் கேட்கிறார். அதற்கு அது தெரிஞ்சா சொல்ல மாட்டாரா என்று ஆடிட்டரை கலாய்க்கிறார் கரிகாலன்.
இவ்வாறு போய்க் கொண்டிருக்கும் நிலையில் ஏற்கனவே கௌதம் உதவியுடன் ஜீவானந்ததிடம் ஈஸ்வரி பேசினார். ஆனால் தற்பொழுது ஒருவழியாக ஜீவானந்தத்தை சந்தித்துள்ளார் ஈஸ்வரி. ஜீவானந்தம் வேறு யாரும் கிடையாது ஈஸ்வரி கல்லூரியில் காதலித்த நபர் தான்.
அதாவது தற்பொழுது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் கதிர், ஞானம் இருவரும் ஜனனியிடம் சண்டை போட உங்களுக்கு இப்ப என்ன வேண்டும் என்று கேட்க அதற்கு ஐந்து கோடி பணம் வேண்டும் போய் எடுத்துட்டு வா போ என கதிர் சொல்கிறார். இதற்கு நந்தினி சொத்து எல்லாம் போகப்போகுது என்று தெரிந்திடுச்சு அதனாலதான் இவகிட்ட பணம் கேட்கிறீர்களா என கூறி சண்டை போட்டுக் கொள்கிறார்கள்.
பிறகு ஜீவானந்தத்தை சந்தித்து பேசும் ஈஸ்வரி நீங்க பண்றதே ரொம்ப எரிச்சலா இருக்காங்க என்று சொல்ல ஈஸ்வரிக்கு இந்த மாதிரி கோவமே வராது உங்க அப்பா உங்கள குணசேகரனுக்கு கல்யாணம் பண்ணி வச்சுட்டாரு அதுக்கப்புறம் அந்த பையனை நீங்கள் நினைத்திருக்க தேவையில்லை அவர் பேரு ஜீவானந்தம் என கண் கலங்க ஈஸ்வரியும் கதறி அழுகிறார்.